சென்னை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், "இறையாண்மை மிக்க இந்தியப் பேரரசை 'ஒன்றிய அரசு' எனத் தொடர்ந்து அழைப்பது எட்டுக்கோடி தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதற்கும் 140 கோடி இந்திய மக்களைச் சீண்டிப் பார்ப்பதற்கும் சமமானதும் சட்டவிரோதமானதும் தேசவிரோதமானதும் ஆகும்.
"திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிடுவதும் 'திராவிட நாடு' என்ற பிரிவினை முழக்கமும் உள்ளடக்கத்தில் ஒன்றே.
"ஏற்கெனவே '1976, 1990களில் ஆட்சியை இழந்தது நினைவில் இல்லாமலா போய்
விடும்? இது தொடர்ந்தால் ஐந்து வருடத்திற்குப் பிறகு வர வேண்டிய முடிவு, ஐந்தே மாதத்தில் வந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை," என்று கூறியுள்ளார்.

