சசிகலா இல்லாத அதிமுக சிறப்பு: ஜெயக்குமார்

சசிகலா இல்லாத அதிமுக சிறப்பு: ஜெயக்குமார்

1 mins read
1ea76b1f-24c1-4d4a-b87c-b15c4bf337e1
-

சென்னை: திமுக தலை­மை­யி­லான புதிய அரசு பொறுப்­பேற்­றுக்­கொண்ட பிறகு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி அதி­மு­க­வால் அறி­விக்­கப்­பட்­டார். ஆனால் எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர், அதி­முக கொறடா ஆகிய பொறுப்­பு­களில் இது­வரை யாரும் நிய­மிக்­கப்­ப­டா­தது அதி­மு­க­வில் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யில், வரும் 14ஆம் தேதி அதி­முக எம்­எல்­ஏக்­கள் கூட்­டம் நடை­பெ­றும் என முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார். எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர், கொறடா தேர்வு பற்றி இக்கூட்டத்தில் ஆலோ­சிக்க வாய்ப்­புள்­ள­தாகக் கூறப்படுகிறது.

எம்­எல்­ஏக்­கள் கூட்­டத்­திற்கு அனு­மதி கோரி டிஜிபி அலு­வ­ல­கத்­தில் ஜெயக்­கு­மார் மனு கொடுத்­தார். அதன் பிறகு செய்­தி­யா­ளர்

­க­ளைச் சந்­தித்த அவர், "சசி­கலா இல்­லா­மல் அதி­முக சிறப்­பாக செயல்­பட்­டு­வ­ரு­கிறது. இந்த நிலை தொட­ரும். அதி­மு­க­ பொதுச்­செ­ய­லா­ள­ராக யாரை­யும் தேர்­வு­செய்ய மாட்­டோம். ஓபி­எஸ், இபி­எஸ்­தான் கட்­சியை வழி­ந­டத்­து­வர்," என்றார்.