சென்னை: தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் கர்நாடகா மாநிலத்துக்குச் சென்று அங்கிருந்து மது போத்தல்களைக் கடத்தி வந்து குடிக் கின்றனர்.
காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களில் அவற்றை மறைத்து கடத்தி வருகின்றனர். அதனை அறிந்ததும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை காவல் துறையினர் இரவு பகலாகச் சோதனையிட்டனர்.
காரிலும் மோட்டார்சைக்கிளிலும் கடத்தி வரப்பட்ட மது போத்தல்கள் அப்போது சிக்கின.
ஒரு மாத காலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மது போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு காவல்துறை கண்
காணிப்பு அதிகாரி மகேஷ்குமார் கூறினார்.
இவற்றைக் கடத்தி வந்த 40 கார்களும் 80 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

