செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b90c447a-f31d-4917-84d3-376201317b87
-

தடுப்பூசி இணையத்தளத்தில் தமிழ்

சென்னை: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையத்தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். இதில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டபோது தமிழ் மொழி மட்டும் இணைக்கப்படாமல் இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தமிழை யும் சேர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். தற்போது அந்த இணையத்தளத்தில் 12வது மொழியாக தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.

எடப்பாடிக்கு எதிராக சுவரொட்டி

நெல்லை: நெல்லை மாந­கர் முழு­வ­தும் முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு எதி­ராக அதி­மு­க­வி­னர் ஒட்­டி­யுள்ள சுவ­ரொட்­டி­யால் பர­ப­ரப்பு கிளம்­பி­யுள்­ளது. தேர்­தல் தோல்­விக்­குப் பிறகு எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் முன்­னாள் துணை முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் தனித்­த­னி­யாக அறிக்­கை­கள் வெளி­யிட்டு வரு­வ­தால் தொண்­டர்­கள் மத்­தி­யில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

தமிழில் அர்ச்சனை: கம்யூ. மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் கூறியிருந்தார். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "எல்லா சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப் படும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கூறியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியோடு வரவேற்கிறது," என்று கூறியுள்ளார்.

மின்னல் தாக்கி மூவர் மரணம்

சாத்­தூர்: விரு­து­ந­கர் மாவட்­டம் சாத்­தூர் அருகே நள்ளி கிரா­மத்­தைச் சேர்ந்த ஆறு பேர் காட்­டுப்­ப­கு­தி­யி­லுள்ள துர்க்­கை­யம்­மன் கோயி­லுக்கு சாமி கும்­பி­டச் சென்­ற­னர். மழை பெய்ததால் அவர்­கள் அனை­வ­ரும் கோயில் வாச­ல் அருகே நின்­றி­ருந்­த­னர். அப்­போது மின்­னல் தாக்­கி­ய­தில் சண்­மு­க­சுந்­த­ர­வள்ளி, 56, கருப்­ப­சாமி, 16, தங்­க­மா­ரி­யம்­மாள், 45, ஆகி­யோர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். மேலும் இரு­வர் காயத்­து­டன் உயிர்­தப்­பி­னர்.

மீண்டும் கீழடி அகழாய்வுப் பணி

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டம் கீழ­டி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த 7ஆம் கட்ட அக­ழாய்­வுப் பணி­கள் ஊர­டங்கு கார­ண­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்­தன. தற்­போது ஊர­டங்­கில் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து 29 நாட்­க­ளுக்­குப் பின் செவ்­வாய்க்­கி­ழமை முதல் 8 பணி­யா­ளர்­க­ளு­டன் அக­ழாய்­வுப் பணி­கள் தொடங்­கி­யுள்­ளன.