தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மனு

1 mins read
d9ffb064-a5cb-4bef-9b09-a56f22f53d65
-

கோவை மாவட்டம், இக்கரை போளுவம்பட்டியில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி துப்புரவுப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த 8ஆம் தேதி, தூய்மைப் பணியாளர்கள் சென்ற குப்பை அள்ளும் வாகனம் கோவை நொய்யல் பாலம் அருகில் விபத்தில் சிக்கியது. இதில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பெண்கள் உள்பட 7 பேர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தி துப்புரவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: தமிழக ஊடகம்