அமைச்சர்: 36 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் 95,120 குப்பி கோவாக்சின் சென்னை வந்தது

அமைச்சர்: 36 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் 95,120 குப்பி கோவாக்சின் சென்னை வந்தது

2 mins read
e4facf83-3857-4da9-b0dd-de13aa73476e
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 36 மாவட்­டங்­களில் தடுப்­பூ­சி மருந்தின் கையிருப்பு தீர்ந்­து­விட்­டது. சென்­னை­யில் மட்­டும் 1,060 தடுப்­பூசி குப்பிகள் இருப்பில் உள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முழு­வ­து­மாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்துள்ளார்.

ஜூன் மாதத்­திற்குத் தேவையான மருந்தை மத்­திய அரசு அனுப்­பி­னால் மட்­டுமே இனி தமி­ழக மக்­க­ளுக்­குத் தடுப்பூசி போட­மு­டி­யும் என்ற சூழல் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சென்னை சைதாப்­பேட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசிய அவர், "தடுப்­பூசி குறித்து மக்­க­ளி­டையே உண்மை நிலையைக் கூறுவதுதான் சரி­யாக இருக்­கும்," என்றவர், "முதல்­வர் காப்­பீட்டுத் திட்­டத்தை முறை­யாகச் செயல்­படுத்தாத 40 தனி­யார் மருத்­து­வ­மனை­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது," எனக் கூறினார்.

இதற்கிடையே, தடுப்­பூசியைப் போட்­டுக்­கொள்­வ­தற்­காக முன்­கூட்­டியே பதிந்­து­கொண்­டி­ருந்த மக்­கள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று அங்கு மருந்தில்லாமல் ஏமாற்­றத்­து­டன் திரும்பினர்.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,321 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், இத்தொற்று காரணமாக 405 பேர் பலியாகினர்.

தடுப்பூசியை இரு முறை போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இப்போது நிலவும் தடுப் பூசி தட்டுப்பாட்டால் மீண்­டும் கொரோனா அலை வீசும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளதாக அஞ்சப்படுகிறது.

சென்னை: தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பூசிகளை உட­ன­டி­யாக அனுப்பிவைக்­கும்­படி மத்­திய அர­சுக்கு சுகா­தா­ரத்­துறை செயலா ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் அவ­சரக் கடி­தம் அனுப்­பியுள்ளார்.

இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்து 95,120 கோவாக்சின் தடுப்பு மருந்து குப்பிகள் சென்னை வந்தடைந்தன. இதில் 85,000 டோஸ் தடுப்பூசி மாநில அரசின் சுகாதாரத்துறைக்கும், எஞ்சியவை தனியார் மருத்துவ மனைகளுக்கும் வழங்கப்பட்டன.