மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர் ஒருவருக்கும் பேருந்தில் பயணம் இலவசம்

மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர் ஒருவருக்கும் பேருந்தில் பயணம் இலவசம்

1 mins read
bd4144da-0056-446b-bf7a-d4c3207cddb5
-

சென்னை: தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்து ஒரு மாதமே முடிவுற்றுள்ள நிலை­யில், மக்­களை ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில் அடுத்­த­டுத்து பல புதுப்­புது திட்­டங்­க­ளை­யும் அறி­வித்து வரு­கி­றார்.

இந்­தத் திட்­டங்­க­ளின் வரிசை யில், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மட்டு­மின்றி அவர்­க­ளு­டன் செல்­லும் உத­வி­யா­ளர் ஒரு­வ­ரும் பேருந்­தில் கட்­ட­ண­மின்றி, இல­வசமாகப் பய­ணம் செய்யலாம் என அரசு அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது.

தமி­ழ­கத்தில் உள்ள அர­சுப் பேருந்­து­களில் மக­ளிர் அனை­வரும் இல­வ­ச­மாகப் பய­ணம் செய்­ய­லாம் என முதல்­வர் அறி­வித்­தார்.

இத்­திட்­டம் கடந்த மாதம் 8ஆம் தேதி நடை­மு­றைக்கு வந்தது.

அத­னைத்­தொ­டர்ந்து, திரு­நங்­கை­களும் தங்­க­ளுக்­கு சலுகை களை வழங்­கும்படி­ கோரினர்.

இதை­ய­டுத்து, திரு­நங்­கை­களும் பேருந்­து­களில் இல­வ­ச­மாகப் பய­ணம் செய்­ய­லாம் என்ற அறி­விப்பு வெளி­யா­னது. அதன்­பி­றகு, மாற்­றுத்­தி­ற­னாளிகளுக்­கும் இந்­தச் சலுகை நீட்­டிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­குத் துணை­யா­கச் செல்­லும் உத­வி­யா­ளர் ஒரு­வ­ருக்­கும் கட்­ட­ணம் கிடை­யாது என்ற அறி­விப்பை அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இந்த பய­ணத்­துக்­கான வழி­காட்டி நெறி­மு­றை­களை மாற்­றுத்­தி­ற­னாளிகள் நலத் துறைச் செயலா் ஆா்.லால்­வேனா பிறப்­பித்­துள்ளாா்.

அதில், "மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உத­வி­யாளா் ஒரு­வ­ரு­டன் அர­சுப் பேருந்­து­களில் கட்­ட­ண­மில்லா பய­ணம் மேற்கொள்ள அனு­ம­திக்­கப்படு­கிறது. பயணத்தின் போது, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான தேசிய அடை­யாள அட்­டையை பேருந்து நடத்­து­ந­ரி­டம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் காண்­பிப்­பது அவ­சி­யம்," என்று கூறப்பட்டுள்ளது.