சென்னை: 16வது தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் வரும் 21ஆம் ேததி தொடங்க உள்ளதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செய லகத்தில் செய்தியாளர்களிடம் மு.அப்பாவு பேசியபோது, "சட்ட மன்றத்தில் ஆளும் கட்சி, கூட்ட ணிக் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியினருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜனநாயக முறையில் அவை நடத்தப்பட வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். அந்த அடிப்படையில்தான் சட்டமன்றக் கூட்டத் தொடர் அனைத்தும் நடைபெறும்.
"சட்டசபையில் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். இதற்கு முன்பு எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் அங்கு பணியாற்ற வரும் அனை வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்றில்லாதவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படு வார்கள்," என்று அவர் கூறினார்.

