விபத்தில் கர்ப்பிணி உள்பட மூவர் பலி

விபத்தில் கர்ப்பிணி உள்பட மூவர் பலி

1 mins read
8f0013a2-cd73-4921-8ca3-af3f2f7dd1b2
-
Google News Preferred Icon

கள்ளக்குறிச்சி: கள்ளக் குறிச்சி அருகே நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுடன் புறப்பட்டுச் சென்ற அவசர சிகிச்சை வாகனம் ஒன்று டயர் வெடித்து, சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி யதில் கர்ப்பிணிப் பெண் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி. 23 வயதான இவருக்கு ேநற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது உறவினர்கள் அவசர சிகிச்சை வாகனத்தை அழைத்துள்ளனர்.

ஜெயலட்சுமியுடன் அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஆலத்தூர் அருகே விபத்து நேர்ந்ததில் மாமியார், நாத்தனாருடன் கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார். படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், தாதி, உதவியாளர் என நால்வர் மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகின்றனர்.