அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: பழனிசாமி புது வியூகம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: பழனிசாமி புது வியூகம்

2 mins read
f0e5be42-22f9-4e70-b777-c04ce93825aa
எடப்பாடி பழனிசாமியுடன் பன்னீர்செல்வம். படம்: ஊடகம் -

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க அனுமதி இல்லை

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 14ஆம் தேதி சென்­னை­யில் நடை­பெற உள்ள அதி­முக எம்­எல்­ஏக்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்க நிர்­வா­கி­க­ளுக்கு அனு­மதி இல்லை என்ற அறி­விப்பு அக்­கட்­சிக்­குள் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ. பன்­னீர்­செல்­வம் இடை­யே­யான அதி­காரப் போட்டி மேலும் வலுத்து வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதி­முக எம்­எல்­ஏக்­கள் கூட்­டம் வரும் 14ஆம் தேதி சென்­னை­யில் உள்ள அக்­கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில் நடை­பெற உள்­ளது. இது­தொ­டர்­பாக தமி­ழக சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் அதி­முக இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ. பன்­னீர் செல்­வ­மும் கூட்­டாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், கட்சி நிர்­வா­கி­கள் பங்­கேற்க அனு­மதி இல்லை எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கொரோனா நெருக்­கடி வேளை­யில் அதி­க­மா­னோர் கட்சி அலு­வ­ல­கத்­தில் கூடு­வ­தைத் தவிர்க்­கும் பொருட்டே இவ்­வாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக கட்­சித் தலைமை தெரி­வித்­துள்­ளது. மேலும் எம்எல்ஏக்­கள் தவிர வேறு யாருக்­கும் அலு­வ­ல­கத்­தில் நுழைய அனு­மதி இல்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­முக எம்­எல்­ஏக்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் ஆத­ர­வா­ளர்­கள் என அண்­மை­யில் சில ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன. அதை மீண்­டும் நிரூ­பிக்­கும் வகை­யில் எதிர்­வ­ரும் கூட்­டத்தை அவ­ரது தரப்பு நடத்­திக்­காட்ட இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்கு கட்­சி­யில் உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­க­வேண்­டும் என அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

நெல்லை மாவட்­டத்­தில் மானூர் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் தங்­கள் கோரிக்­கையை வலி­யு­றுத்தி ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் சுவ­ரொட்­டி­களை ஒட்டி உள்­ள­னர். இவற்­றில் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு எதி­ரான வாச­கங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இத­னால் கடும் கோபம் அடைந்­துள்ள எடப்­பாடி பழ­னி­சாமி ஆத­ர­வா­ளர்­கள் சுவ­ரொட்­டி­களை ஒட்­டி­ய­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ள­ரி­டம் புகார் அளித்­துள்­ள­னர். தென் ­மா­வட்­டங்­களில் ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் மீண்­டும் எடப்­பா­டிக்கு எதி­ராக போர்க்­கொடி உயர்த்தி இருப்­பது அதி­முக வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அனைத்து எம்­எல்­ஏக்களின் ஆத­ர­வை­யும் பெறு­வ­துதான் எடப்பாடி­யின் திட்­டம். அதற்­கான வியூ­கம்­தான் எம்­எல்­ஏக்­கள் கூட்டம் என்­கி­றார்­கள் பழ­னி­சா­மி­யின் ஆத­ர­வா­ளர்­கள்.