பாலியல் சீண்டல் புகார்: பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இயங்கிவரும் பள்ளியின் நிர்வாகிகளிடம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தீவிர விசாரணை நடத்தி உள்ளது.

அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு 51 வயதான ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆசிரியர் கைதாகி உள்ளார்.

அப்பள்ளி நிர்வாகிகளை விசாரிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதை ஏற்று நேற்று முன்தினம் காலை நிர்வாகிகள் நேரில் முன்னிலையாகினர்.

இதற்கிடையே ஐஆர்எஸ் அதிகாரி சரவணன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்திய வருவாய்த் துறையில் உயர் பதவியில் இருக்கும் சரவணன், யுபிஎஸ் தேர்வில் மிக இளம் வயதில் தேர்வு பெற்றவர்.

இவர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடந்து வருவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!