வேலூர்: ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து சாராயம் காய்ச்சுவதும் வெளி மாநிலங்களில் இருந்து மதுப்புட்டிகளைக் கடத்தி வருவதும் அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு கடத்தி வரப்படும் மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தினமும் ரயில், கார், இருசக்கர வாகனங்களில் மது கடத்தி வரப்படுவதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
'ஆபரேஷன் விண்ட்' என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையில் வேலூரில் மட்டும் ஐம்பது பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்துள்ளது. விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபுட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
தமிழக, புதுவை எல்லையிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

