நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஒன்பது பேர் கொண்ட குழு

சென்னை: நீட் தேர்­வி­னால் தமி­ழ­கத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் குறித்து ஆராய உயர்­நி­லைக் குழு ஒன்றை தமி­ழக அரசு அமைத்­துள்­ளது. இதில் 9 பேர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

நீதி­பதி ஏ.கே. ராஜன் தலை­மை­யில் இக்­குழு செயல்­படும். இந்­தக் குழு­வி­னர் அளிக்­கும் அறிக்­கை­யின் பேரில் தமி­ழக அரசு அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­க­ளை­மேற்­கொள்­ளும் என தெரி­கிறது.

மருத்­து­வப் படிப்பு மாணவ சேர்க்கைக்­காக நீட் தேர்வு நடத்­தப்­படு­கிறது.

இத்­தேர்­வுக்கு தொடக்­கத்­தில் இருந்தே தமி­ழ­கத்­தில் கடும் எதிர்ப்பு நிலவி வரு­கிறது.

நீட் தேர்வை ரத்து செய்­ய­ வேண்­டும் எனும் கோரிக்­கை­யும் பல்­வேறு தரப்­பு­க­ளால் முன்­வைக்­கப்­பட்­டன.

நடப்பு ஆண்­டுக்­கான நீட் தேர்வு குறித்த அறி­விப்பு இன்­னும் வெளி­யா­க­வில்லை. இந்­நி­லை­யில் உயர்­நிலைக்­குழு ஒன்றை அமைத்­துள்­ளது தமி­ழக அரசு.

இத்­தேர்­வால் தமி­ழ­கத்­தில் ஏற்­படக்­கூ­டிய தாக்­கம் எந்த அள­வில் இருக்­கிறது? இத்­தேர்வு கார­ண­மாக மாண­வர்­கள் எத்­த­கைய விளை­வு­களை எதிர்­கொள்­கி­றார்­கள்? எனப் பல்­வேறு அம்­சங்­களை இந்த உயர்­நி­லைக் குழு ஆரா­யும்.

இது தொடர்­பாக தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், “முதல்­வ­ரால் நிய­மிக்­கப்­பட்டுள்ள சிறப்­புக் குழு­வா­னது உரிய புள்ளி ­வி­வ­ரங்­களை ஆய்வு செய்து தமி­ழ­கத்­தில் உள்ள பின்­தங்­கிய மாண­வர்­க­ளின் நல­னைப் பாது­காக்க தேவை­யான பரிந்­து­ரை­களை ஒரு­மாத காலத்திற்குள் அர­சுக்கு அளிக்­கும்,” என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!