மதுரை: ஊரடங்கு காரணமாக உட னடியாக கனடாவுக்குச் செல்ல முடியாமல் விடுதியில் தங்கியிருந்த 61 இலங்கைத் தமிழர்களைப் ேபாலிசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து சரக்குக் கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 38 பேரை அம்மாநிலப் போலிசார் கைது செய்தனர். அதேபோல், மேலும் 23 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் இருந்து இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக கனடா வுக்குச் செல்வதாக அம்மாநிலப் போலிசாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, மங்களூரில் சட்டவிரோத மாகத் தங்கியிருந்த 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், மதுரையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேரை மதுரை கப்பலூர் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் காசி விஸ்வநாதன் என்பவர் மூலம் அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றது தெரியவந்தது.
தற்போது வெளிநாடுகளுக்குச் செல்ல விமானப் போக்குவரத்து இல்லாத சூழலில், அவர்கள் அனை வரும் மதுரையில் கடந்த சில மாதமாகத் தங்கி இருந்துள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆவ ணங்கள், ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த போலிசார், தலை மறைவாக உள்ள காசிவிஸ்வநாதன் என்பவரைத் தேடி வருகின்றனர்.

