தேனி: மற்ற மாநிலங்களைக் காட்டி லும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறுவதில் தமிழ்நாட்டில் சுணக்கம் தென்படுகிறது. முதல்வர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புள்ளி விவரங்களுடன் விளக்கி இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
"மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப் பட்டால்தான் வருங்காலத்தில் உயி ரிழப்புகள் தவிர்க்கப்படும்.
"தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் கூட 24%க்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் வெறும் 19% மக்கள்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
"புள்ளிவிவரங்களின் அடிப்படை யில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகம்தான் தடுப்பூசி போடுவதில் கடைசி இடத்தில் உள்ளது.
"தமிழகத்தைவிட மக்கள் தொகை குறைந்த மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜ ராத் போன்ற மாநிலங்களில் எல்லாம் அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட் டுள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.

