அமைச்சர்: மூன்றாவது அலையை நினைத்து அச்சம் வேண்டாம் யோகா செய்துகாட்டி கைதட்டல் பெற்ற அமைச்சர்

1 mins read
c71f6aab-c751-4681-89c5-b3346144b5c3
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவத்துக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது அங்கு வழங்கப்படும் யோகாசனப் பயிற்சியில் அவரும் ஈடுபட்டு அனைவரது கைதட்டலையும் பெற்றார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோரும் உடனிருந்தனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தொற்­றின் மூன்­றா­வது அலை வந்­தா­லும் அதனை சமா­ளிக்­கத் தேவை­யான கட்­ட­மைப்பு வச­தி­கள் நம்­மி­டம் உள்­ளன. அதை எண்ணி மக்­கள் அச்­சம் கொள்­ளத் தேவை யில்லை என மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்சா் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்துள்ளார்.

மத்­திய அர­சி­டம் இருந்து பெறப்­பட்ட 3.65 லட்­சம் கொவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­களை சென்னை டி.எம்.எஸ். வளா­கத்­தில் உள்ள தடுப்­பூசி மருந்­து­கள் சேமிப்புக் கிடங்­குக்கு கொண்டு வரப்­பட்­டதை ­அடுத்து, அங்கு மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் ஆய்வு மேற்­கொண்­டார்.

அதன்­பின்­னர் அமைச்­சர் செய்தி யாளா்க­ளி­டம் பேசி­யபோது, "அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் அனைத்­தி­லும் உயிர்­வாயு வச­தி­யு­டன் படுக்­கை­கள் போடப்பட்டு வரு­கின்­றன.

"அத்துடன், மாநி­லத்­தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரு­வ­தால் ஏறத்­தாழ 50,000 படுக்­கை­கள் காலி­யாகவும் உள்­ளன. அவற்­றில் பெரும்­பாலானவை உயிர்­வாயு வச­தி­யு­டன் கூடி­யவை.

"மாநிலத்தில் கொவிட்-19 இரண்­டா­வது அலை­யின் பாதிப்பு குறைந்து வரு­கிறது. எனி­னும், எதிர்­வ­ரும் நவம்­பர், டிசம்­பர் மாதங்­களில் மூன்­றா­வது அலை­யின் பாதிப்பு வரக்­கூ­டும் என்று சொல்­லப்­ப­டு­கிறது. இந்த அலை வராமல் இருப்பதுதான் நல்லது.

"அப்படியே வந்­தா­லும் அச்­சப்­படத் தேவை­யில்லை.

"தற்­போது 3 லட்­சத்து 65 ஆயி­ரம் தடுப்­பூ­சி­கள் வந்­துள்­ளன.

"இந்த தடுப்­பூ­சி­கள் தேவைக்கு ஏற்ப மாவட்­டங்­க­ளுக்கு பிரித்து அனுப்­பப்­படும்.

"அத்துடன், இது­வரை ஆயி­ரத்து 299 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான மருந்­து­களும் கையி­ருப்­பில் உள்­ளன," என்று அவர் கூறியுள்ளார்.