புதுக்கோட்டை: கொரோனா கிருமி பாதிப்பில் இருந்து குணமடைந்த வழக்கறிஞர் ஒருவர், தான் வீட்டுக்குச் செல்லும் முன்பு, தன்னை நல்லமுறையில் கவனித்துக்கொண்ட தாதிகளின் பாதங்களில் மல்லிகைப் பூக்களைத் தூவி, கையெடுத்து கும்பிட்டு நன்றி செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த மணி மாறன், 50, என்ற வழக்கறிஞர், நுரையீரல் தொற்று காரணமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் கடந்த சில நாட்களாக சிகிச்சை ெபற்று வந்தார்.
ஆரம்பக் கட்டத்தில் இரும லுடன் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்ட இவர் தொடர் சிகிச்சையால் முழுமையாகக் குணமடைந்தார்.
"உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் உங்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் சேவை அளப்பரியது. என்னை எந்த அளவிற்கு கவனித்துக்கொண்டீர்களோ அதேபோல் இங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்," என்று மணிமாறன் தாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

