கொரோனா என்றால் என்ன? என்று கேட்கும் வெள்ளகவி ‘மூலிகை கிராம’ மக்கள்

கொடைக்­கா­னல்: இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலை, இரண்­டாம் அலை காரணமாக நாளும் பல்­லா­யி­ரக்­கணக்­கான மக்­கள் பாதிக்­கப்­பட்டு, உயி­ரி­ழந்து வருகின்றனர்.

ஆனால், இந்தப் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் "கொரோனா என்றால் என்ன?" என்று கேள்வி கேட்கும் நிலையில் கொடைக்­கா­ன­லில் வசிக்­கும் வெள்­ள­கவி கிராம மக்­கள் உள்ளனர்.

இவர்களிடம் கொரோனா அச்­சம் என்­பது துளி கூட இல்லை. அதேேபால், முகக்கவ­சம் அணி­யா­மல் தங்­க­ளது பணி­களைக் கவ­னித்து வருகின்­ற­னர்.

மூலி­கை­கள் நிறைந்த காட்­டுப் பகு­திக்கு நடுவே தங்­க­ளது கிராமம் அமைந்துள்­ள­தால் எந்த ஒரு தொற்றும் அண்­டா­மல் மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாகவும் கிராமத்தினர் கூறு­கின்­ற­னர்.

ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்­றி­ய­தா­கக் கூறப்­படும் இந்தக் கிரா­மத்­தில் 150 குடும்­பத்­தி­னர் வசித்து வரு­கின்­ற­னர்.

இங்கு ஏலக்­காய், காபி, அவக்­காேடா, மிளகு உள்­ளிட்ட மலைப்­பயிர்­கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை குதிரைகளில் ஏற்றிச் சென்று விற்று தங்­க­ளது வாழ்க்­கையை நடத்தி வரு­கின்­ற­னர்.

"சளி, காய்ச்­சல், தலை­வ­லிக்கு கூட மருந்து மாத்­தி­ரை­கள் பயன்­படுத்தாமல் கைவைத்­தி­யம் செய்து கொள்வதாக­வும் இங்கு விளை­விக்­கப்­படும் சத்­தான காய்­க­றி­களை அதி­கம் உண்­ப­தா­லும் மூலிகைகள் நிறைந்த வனப்பகு­திக்கு நடுவே தங்­கள் கிரா­மம் அமைந்­துள்­ள­தாலும் நோய்த்­தொற்று அண்­டா­மல் வாழ்­கிறோம்," என்று வெள்ளகவி மக்கள் கூறுகின்றனர்.

இந்த கிரா­மத்தைச் சுற்றி நிறைய காவல் தெய்­வங்­கள் இருப்­ப­தால் காலணி அணியாமல் வெறும் கால்­க­ளுடனே சுற்றி வரு­கி­ன்றனர்.

தங்கள் கிரா­மத்­திற்கு விரை­வில் சாலை அமைப்­ப­தற்கு தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!