சென்னை: அதிமுக ஆதரவாளர்கள், நிர்வாகிகளிடம் சசிகலா (படம்) பேசும் ஆடியோ ஒலிப்பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், சசிகலாவின் தரப்பினர் இப்போது வெளியிட்டுள்ள புதிய ஆடியோ ஒலிப்பதிவில் எடப்பாடி பழனிசாமி பற்றியும் சசிகலா பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் எம்பியும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமியிடம் சசிகலா பேசும் ஒலிப்பதிவு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அந்த உரையாடல் விவரம்:
தொண்டர்: அம்மா வணக்கம்மா...
சசிகலா: வணக்கம் சின்ன சாமி... எப்படி இருக்கீங்க...
தொண்டர்: நீங்க நல்லா இருந்தா நாங்களும் நல்லா இருப்போம்மா...
சசிகலா: சந்தோசம். ரொம்ப நாளாச்சு... உங்களிடம் பேசி...
தொண்டர்: அம்மா... இனி நீங்கள் கட்சிக்கு வரணும்ம்மா.... அதுதான் எங்களுக்கு வேணும்
சசிகலா: சரி... சரி... சரி... நீங்க எல்லாமே அம்மா (ஜெய லலிதா) தந்த பதவியில் நல்லா இருந்தவங்க... பழைய ஆட்கள்.
தொண்டர்: எல்லாமே உங்க ளால் வந்தது தானம்மா... அம்மா இருந்த காலத்துல உங்கள அடிக்கடி நான் வந்து சந்திப்பேன்.
சசிகலா: ஆமா... ஆமா... இப்போது கொரோனா காலம். கவனமா இருங்க... கொரோனா தீவிரம் குறைந்ததும் தொண்டர்களை நிச்சயம் சந்திப்பேன்.
தொண்டர்: நீங்க சொல்லுங் கம்மா...
சசிகலா: கட்டாயம் சொல்றேன் சின்னசாமி. நாம் சந்திப்போம்.
தொண்டர்: சரிம்மா.. நீங்க தலைமையேற்றால்தான் எல்லாமே சரியா வரும்மா...
சசிகலா: அது உங்களுக்கும் தெரியுது.
தொண்டர்: கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிய கோபுரத்துல உட்கார வச்சீங்களே... அந்த நன்றிய நினைச்சு பாத்தாங்களா?
சசிகலா: சரி என்ன பண்றது.
தொண்டர்: உங்க தலைமை வரணும்மா...
சசிகலா: சரி... சரி... நிச்சயம் நடக்கும். கட்டாயம் வரேன்.
இவ்வாறு அந்த உரையாடல் நிறைவு பெறுகிறது.
மற்றோர் ஒலிப்பதிவில் "தொண்டர்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன்... கவலைப் படாதீங்க.. விரைவில் நான் எல்லோரையும் சந்திக்கிறேன்... நல்லபடியாக கட்சியைக் கொண்டு வருவோம்... ஆட்சிக்கும் வரு வோம். நீங்கள் எல்லாமே என் பிள்ளைகள்தான்... கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன். அதனால்தான் தொண்டர்களிடம் பேச ஆரம்பித்து இருக்கிறேன்," என்கிறார்.
அத்துடன், முதல்முறையாக பழனிசாமியின் பெயரை தனது கடைசி ஒலிப்பதிவில் பயன்படுத்தி உள்ளார் சசிகலா. "நான் சாதி பார்க்குற ஆள் கிடையாது.. அப்படி பார்த்திருந்தால் எடப் பாடியை முதல்வர் ஆக்கியிருப் பேனா?" என்கிறார். இந்த ஒரு வரியில் மூன்று விஷயங்கள் உள்ளன. ஒன்று, எடப்பாடியின் பெயரைப் பயன்படுத்தியது, இரண் டாவதாக தன்னால்தான் எடப்பாடி முதல்வரானார் என்கிறார். மூன்றா வதாக சாதியைக் கையில் எடுத் துள்ளார் சசிகலா என்கின்றனர்.

