கொவிட்-19 பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது

கொவிட்-19 பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது

1 mins read
1bba1c6e-b25d-4ccf-a6ee-852a6f2a18ec
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஏற்­படும் பாதிப்­பு­கள் கடந்த சில நாட்­க­ளா­கவே தொடர்ந்து குறைந்து வரு­வ­து­டன் உயி­ரி­ழப்­பும் குறைந்து உள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் 14,016 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது.

அதே­போல் உயி­ரி­ழப்பு ஏற்ற இறக்­கத்­து­டன் இருந்து வந்த நிலை­யில், நேற்று 267 ஆக குறைந்­துள்­ளது.

இது­கு­றித்து தமிழ்­நாடு மருத்து வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில்,

"தமி­ழ­கத்­தில் நேற்று புதி­தாக 168,663 பேருக்கு பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது.

"இவர்­களில் மொத்­தம் 14,016 பேருக்கு புதி­தாக கொரோனா உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது. அவ்­வ­கை­யில் தமி­ழ­கத்­தில் இது­வரை 29 ஆயி­ரத்து 547 பேர் கொரோனா நோய்த் தொற்­றால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.