சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினி

சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினி

1 mins read
213e63e2-95d0-4cf9-aab9-378a103c1fef
-

சென்னை: நடி­கர் ரஜி­னி­காந்த் (படம்), மருத்­து­வப் பரி­சோ­த­னைக் காக தனி விமா­னம் மூலம் விரை­வில் அமெ­ரிக்­கா­வுக்­குச் செல்ல உள்­ளார். இதற்கு மத்­திய அர­சும் அனு­மதி வழங்கி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தனி விமா­னத்­தில் 14 பேர் வரை பய­ணம் செய்­ய­லாம் என்­ப­தால் தனது குடும்­பத்­தி­ன­ரை­யும் உடன் அழைத்­துச் செல்ல உள்ளாராம்.

ரஜினி உடல்­ந­லப் பரி­சோ­த­னைக்­காக அவ்­வப்­போது அமெ­ரிக்கா சென்று வரு­வது வழக்­கம். எனி­னும், இம்­முறை மருத்­துவ சிகிச்சை முடிந்­த­பின் அெமரிக்­கா­வி­லேயே சிறிது காலம் தங்கி ஓய்வு எடுக்­க­வும் அவர் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்­கள் ெதரி­வித்­துள்­ளன.

ஊர­டங்கு கார­ண­மாக தற்­போது அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தால் தனி விமா­னத்­தில் செல்­வ­தற்கு மத்­திய அரசு அனு­மதி அளிக்­க­வேண்­டும் என இரு மத்­திய அமைச்­சர்­க­ளி­டம் ரஜினி பேசி­ய­தைத் தொடர்ந்து சிறப்பு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்ளதா­கக் கூறப்­ப­டு­கிறது.