இன்று முதல் 100% ஊழியர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவு

இன்று முதல் 100% ஊழியர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவு

1 mins read
f976f898-f6a7-413d-9360-702ce6bedc5a
-
Google News Preferred Icon

புதுச்சேரி: இன்று ஜூன் 16 முதல் 100% அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும் என புதுவை அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தை போலவே யூனியன் பிரதேசமான புதுவையிலும் கொரோனா கிருமி பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அதேேபால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் மெல்ல மெல்ல வழக்க நிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் இதுவரை 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்ப வேண்டும் என புதுவை அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றுமுதல் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டுமென்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுவையை அடுத்து தமிழகத்தில் மிக விரைவில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்பும்படி அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.