சம்பள உயர்வு கோரி மருத்துவர்கள் போராட்டம்

கோவை: கோவை அரசு மருத்து வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரி­யும் மருத்­து­வர்­கள், பயிற்சி மருத்­து­வர்­கள், முது­நிலை மருத்­துவ மாண­வர்­கள் உள்­ளிட்­டோர் சம்­பள உயர்வு கோரி அமை­தி­யான முறை­யில் திடீர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

"நெருக்­க­டி­யான இந்த கொரோனா கால­கட்­டத்­தி­லும் 365 நாள்­களும் மருத்­து­வப் பணி­களில் ஈடு­ப­டு­கி­றோம். ஆனால், அதற்கு உண்­டான சம்­ப­ளம் எங்­க­ளுக்­குக் கிடைப்­ப­தில்லை. எங்­க­ளது பிரச் சினை­களை அர­சின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லவே இந்­தப் போராட்­டத்தை நடத்­து­கி­றோம்," என்று அவர்­கள் கூறி­னர்.

மருத்­து­வ­மனை வளா­கத்­தில் கறுப்­புப் பட்டை அணிந்து போராட்­டம் நடத்­தி­ய­வர்­கள் செய்தி­யா­ளர்­ க­ளிடம் ேபசி­னர்.

"இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில் மருத்­து­வ­மும் அதைச் சார்ந்த விஷயங்களும் மிக­வும் சிறப்­பான முறையில் கையா­ளப்­பட்டு வரு­கின்­றன. ஆனால், அதே­வே­ளை­யில் தமி­ழ­க மருத்­து­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் ஊக்­கத்­தொகை குறை­வாக உள்­ளது. இதை ஆண்­டு­தோறும் அதி­க­ரித்து தரவேண்­டும்," என்று கோரி­னர்.

"அரசு உதவி பெறும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் பணி­பு­ரி­யும் மருத்­து­வர்­க­ளுக்கு ரூ.70,000 வரை மாத சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கிறது. ஆனால், அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­துவ மாண­வர்­க­ளுக்கு அதில் பாதி கூட கிடைப்­ப­தில்லை," என்றும் கூறிய அவர்கள், "மருத்­து­வப் பயிற்­சி­யில் ஈடு­படும் மாண­வர்­க­ளுக்கு ரூ.20,000 தான் வழங்கப்­ப­டுகிறது. இதனை ரூ.30,000 ஆக வழங்கவேண்­டும்," என­ கேட்டுக்கொண்டனர்.

அதே­போல், மாத உத­வித் தொகை­யை­யும் அதி­க­ரிக்க வேண்­டும் என கோரிய பயிற்சி மருத்­து­வர்­கள், நாட்­டி­லேயே தமி­ழ­கத்­தில்­தான் குறை­வாக சம்­ப­ளம் தரப்­படு­வ­தா­க­வும் இதனை ஆண்­டு­தோ­றும் 10% அதி­க­ரித்து தர வேண்­டும் என்­றும் கோரியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!