சொகுசு காரில் சென்று ஆடு, கோழிகளைத் திருடி விற்பனை செய்த தம்பதியர் கைது

1 mins read
4b678ddd-4078-44c9-9d39-bff4b3b0f52d
லட்சுமி, அஷ்ரப். படம்: ஊடகம் -

திரு.வி.க. நகர்: ஊரடங்கு கால கட்டத்திலும்கூட சொகுசு காரில் ஒரு தம்பதியர் சென்று ஆடு, ேகாழிகளைத் திருடி விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். நீண்ட நாள்களாக இந்த திருட்டில் ஈடுபட்ட வந்த தம்பதியர் சிக்கி யுள்ளனர்.

கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளைத் திருடிய தம்பதியரைப் போலிசார் கைது செய்தனர்.

சென்னை கொரட்டூர் போலிசார் அதே பகுதியில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கைக்குழந்தை யுடன் இருந்த தம்பதியர் போலிசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். விசாரணையில் அவர்கள் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப், 38, லட்சுமி, 36, என்பதும் இவர்கள்தான் 6 மாத கைக்குழந்தை, சிறுவனுடன் சொகுசு காரில் வந்து கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக் கடைகளில் உள்ள கோழிகளையும் வீடுகளில் இரவு நேரங்களில் ஆடுகளையும் திருடி னர் என்பதும் தெரியவந்தது.

ஊரடங்கு சமயத்திலும் இவர்கள் இவ்வாறு சொகுசு காரில் சென்று 100க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளைத் திருடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த தும் தெரியவந்துள்ளது.