செங்கல்பட்டு: சிவசங்கர் பாபா மீது மூன்று மாணவிகள் தனித்தனியாக பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி தனிப்படை குழுவினர் டேராடூன் விரைந்துள்ளனர்.
விசாரணைக்குப் பின் குற்றங் கள் உறுதியானால் அவரைக் கைது செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளதால், அவர் கைதாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் தக வல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று விடாமல் இருக்க, குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவித்து விமான நிலையங்களுக்கு சுற்ற றிக்கை அனுப்ப சிபிசிஐடி போலி சார் முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி அனைத்துலகப் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.
இங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவிகளுக்கு சிவசங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து விசாரிப்பதற்கு சிவசங்கரை நேரில் முன்னிலையாகு மாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அழைப் பாணை அனுப்பியது. பாபாவுக்கு பதிலாக முன்னிலையான ஜானகி என்பவர், நெஞ்சுவலி காரணமாக அவர் உத்தரகாண்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி ஆதா ரங்களைச் சமர்ப்பித்திருந்தார்.
அந்த ஆதாரங்களின் அடிப்ப டையில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலிசார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, 'விருமாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிக ரும் சிவசங்கர் பாபாவின் சீடருமான சண்முகராஜன், பாபாவுக்கு ஆதர வாகக் களமிறங்கியுள்ளார்.
"சிவசங்கர் பாபா தங்கமானவர். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு களில் துளி கூட உண்மை இல்லை. இது திட்டமிட்ட சதி," என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சுஷில்ஹரி பள்ளியில் படித்து வந்த 50% மாண வர்கள் பள்ளியை விட்டுச் சென்று விட்டனர். பத்து ஆசிரியர்களும் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

