மணிகண்டன் பிணை மனு தள்ளுபடி: கைதாக வாய்ப்பு

மணிகண்டன் பிணை மனு தள்ளுபடி: கைதாக வாய்ப்பு

2 mins read
c897f7f4-fda1-413b-8e4a-56f3f4577124
மணிகண்டனுடன் சாந்தினி. படம்: ஊடகம் -

நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கடும் நெருக்கடி

சென்னை: பாலி­யல் வழக்­கில் சிக்­கி­யுள்ள அதி­முக முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் தாக்­கல் செய்­தி­ருந்த பிணை மனு சென்னை உயர் நீதி­மன்­றத்­தால் நேற்று தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து அவர் எந்த நேரத்­தி­லும் கைதா­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் மணி­கண்­டன். அவர் மீது சாந்­தினி என்­ப­வர் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

மணி­கண்­ட­னுக்­கும் தனக்­கும் தொடர்பு இருப்­ப­தா­க­வும் இரு­வ­ரும் கண­வன் மனைவி போல் வாழ்ந்து வந்­த­தா­க­வும் சாந்­தினி தக­வல் வெளி­யிட்­டார்.

மேலும் ஒரே வீட்­டில் மணி­கண்­ட­னு­டன் தாம் வாழ்ந்து வந்த நிலை­யில், முன்பு வாக்­கு­றுதி அளித்­த­படி தன்­னைத் திரு­ம­ணம் செய்­து­கொள்ள அவர் மறுத்­து­விட்­ட­தா­க­வும் சாந்­தினி போலி­சில் தெரி­வித்­துள்­ளார்.

மணி­கண்­ட­னின் வற்­பு­றுத்­தல் கார­ண­மாக மூன்று முறை தாம் கருக்­க­லைப்பு செய்­த­தா­க­வும் தற்­போது தமக்கு கொலை மிரட்­டல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்ள சாந்­தினி, சில திரைப்­ப­டங்­களில் நடித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் தம் மீதான இந்­தப் புகார்­க­ளைத் திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார். தமக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எந்­த­வித ஆதா­ர­மும் இல்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தம்­மி­டம் இருந்து பணம் பறிக்­கும் நோக்­கத்­தில் நடிகை சாந்­தினி பொய்ப் புகார்­களை அடுக்­கு­வ­தாக கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே சாந்­தினி அளித்த புகா­ரின் பேரில் முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் மீது பாலி­யல் பலாத்­கா­ரம், கொலை மிரட்­டல், தாக்­கு­தல், ஏமாற்­று­தல் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­க­ளின் கீழ் சென்னை போலி­சார் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

இத­னால் தம்­மைக் கைது செய்ய வாய்ப்­பி­ருப்­ப­தா­கக் கரு­திய மணி­கண்­டன், முன்­பிணை வழங்­கக் கோரி சென்னை உயர் நீதி­மன்­றத்தை அணு­கி­னார்.

அவ­ரது இந்த மனுவை எதிர்த்து நடிகை சாந்­தினி தரப்­பும் மனுத்­தாக்­கல் செய்­தி­ருந்­தது. தமது மனு­வில் மணி­கண்­ட­னுக்­குப் பிணை வழங்­கக்­கூ­டாது என்­றும் தன்­னைக் கட்­டா­யப்­ப­டுத்தி மணி­கண்­டன் கருக்­கலைப்பு செய்­த­தா­க­வும் சாந்­தினி குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மணி­கண்­ட­னைக் காவ­லில் வைத்து விசா­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் இருப்­ப­தாகத் தெரி­வித்த காவல்­து­றை­யும் பிணை வழங்க எதிர்ப்பு தெரி­வித்­தது. இந்­நி­லை­யில், மணி­கண்­ட­னின் பிணை மனு மீதான விசா­ரணை நேற்று நடை­பெற்­றது. அப்­போது பிணை மனுவைத் தள்­ளு­படி செய்து உயர் நீதி­மன்ற அமர்வு உத்­த­ர­விட்­டது.

இத­னால் முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் எந்த நேரத்­தி­லும் கைதா­க­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அவ­ரைக் கைது செய்ய தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யான நிலை­யில் அதி­முக வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்பு நில­வு­கிறது.