பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைதானார்

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா டெல்லியில் கைதானார்

2 mins read
51b3ad06-42e7-43e6-b61f-e1eb86adbe0a
-

புது­டெல்லி: கைது நட­வ­டிக்­கைக்­குப் பயந்து வட இந்­தி­யா­வுக்­குத் தப்­பிச் சென்ற சிவ­சங்­கர் பாபா (படம்) டெல்­லி­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்­னையை அடுத்­துள்ள கேளம்­பாக்­கத்­தில் பள்­ளிக்­கூ­டம் ஒன்றை நடத்தி வரு­கி­றார் சிவ­சங்­கர் பாபா. அவ­ரது ஆசி­ர­ம­மும் அங்­கு­தான் உள்­ளது.

இந்­நி­லை­யில் தமது பள்­ளி­யில் படித்த ஏழை, ஆத­ர­வற்ற மாண­வி­க­ளுக்கு இவர் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக அண்­மை­யில் அதிர்ச்­சித் தக­வல் வெளி­யா­னது. அவ­ரது பள்­ளி­யில் படித்த முன்­னாள் மாண­வி­கள் தங்­க­ளுக்­குப் பல­வி­தங்­களில் சிவ­சங்­கர் பாபா பாலி­யல் தொல்­லை­கள் கொடுத்­த­தாக காவல்­து­றை­யி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து போலி­சார் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­யில் மாண­வி­கள் தெரி­வித்த தக­வல்­கள் அனைத்­தும் உண்மை என்­பது தெரி­ய­வந்­தது.

72 வய­தான சிவ­சங்­கர் பாபா கடந்த 20 ஆண்­டு­க­ளாக அக்­கு­றிப்­பிட்ட பள்­ளியை நடத்தி வரு­கி­றார். தந்­தையை இழந்த ஏழைச் சிறு­மி­களை அவர்­க­ளின் தாயா­ரு­டன் தனது ஆசி­ர­மத்­தில் தங்க வைப்­பது அவ­ரது வழக்­கம் எனக் கூறப்­ப­டு­கிறது. தந்­தையை இழந்த, வறு­மை­யில் உள்ள குழந்­தை­கள்­தான் அவ­ரது இலக்கு என்று ஒரு­த­ரப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

அமா­வாசை, பௌர்­ணமி தினங்­களில் சிறப்­புப் பூசை­களை நடத்­தும் அவர், அதில் தனது கட்­டுப்­பாட்­டில் உள்ள மாண­வி­க­ளைப் பங்­கேற்­கச் செய்­வார் என்­றும் அந்­தச் சம­யத்­தில் மோச­மான பாலி­யல் துன்­பு­றுத்­தல்­களில் ஈடு­ப­டு­வார் என்­றும் சிலர் கூறி­யுள்­ள­னர்.

சிவ­சங்­கர் பாபா தொடர்பான காணொ­ளிப் பதிவு ஒன்று போலி­சா­ரி­டம் சிக்கி உள்­ள­தா­க­வும், இத­னால் அவர் மீதான பிடி இறு­கி­யுள்­ளது என்­றும் தக­வல் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில், சிவ­சங்­கர் பாபா திடீ­ரென தலை­ம­றை­வா­னார். அவர் வட இந்­தி­யா­வில் உள்ள டேரா­டூ­னில் பதுங்கி இருப்­ப­தா­க­வும் தெரி­ய­வந்­தது. அவ­ரைக் கைது செய்ய தனிப்­படை போலி­சார் அங்கு விரைந்­த­னர். ஆனால், அங்­குள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த அவர், அங்­கி­ருந்­தும் மாய­மா­னார்.

எனவே, அவர் வெளி­நாடு தப்­பிச் செல்­லாத வகை­யில் விமான நிலை­யங்­க­ளி­லும் நாட்­டின் எல்­லை­க­ளி­லும் கண்­கா­ணிப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள காசியாபாத் பகுதியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலிசார் கைது செய்துள்ளனர்.