கறுப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்

1 mins read
15b0c8fe-6f99-411c-b8cc-ee483b82a542
-

சென்னை: பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தி நாளை கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை நடத்த உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுவதாக இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழகக் கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.