'மகளிர் மட்டும்' மாவட்டமாக மாறியது புதுக்கோட்டை

'மகளிர் மட்டும்' மாவட்டமாக மாறியது புதுக்கோட்டை

1 mins read
8ecb39b2-efa6-44a8-be40-659457b3ad0b
-

புதுக்­கோட்டை: புதுக்­கோட்டை மாவட்­டத்­தின் அனைத்து முக்­கி­யப் பொறுப்­பு­க­ளி­லும் பெண் அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இத­னால் அரசு ஊழி­யர்­கள் அதை 'மக­ளிர் மட்­டும்' மாவட்­டம் எனக் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

புதுக்­கோட்டை மாவட்ட ஆட்­சி­ய­ராக கவிதா ராமு அண்­மை­யில் நிய­மிக்­கப்­பட்­டார். இதை­ய­டுத்து மாவட்­டக் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ள­ராக நிஷா பார்த்­தி­பன் பொறுப்­பேற்­றுள்­ளார்.

புதுக்­கோட்டை ஆர்­டிஓ ஆக அபி­நயா, காவல்­துறை துணைக் கண்­கா­ணிப்­பா­ள­ராக வில்லி கிரேஸ் பொறுப்­பில் உள்­ள­னர்.

காவல்­துறை கூடு­தல் கண்­கா­ணிப்­பா­ள­ராக கீதா­வும் மாவட்ட அரசு மருத்­து­வக் கல்­லூரி முதல்வராக பூப­தி­யும் சுகா­தா­ரப் பணி­கள் துணை இயக்­கு­ந­ராக கலை­வா­ணி­யும் முதன்­மைக் கல்வி அலு­வ­ல­ராக விஜ­ய­லட்­சு­மி­யும் பணி­யில் உள்­ள­னர்.

இத­னால் புதுக்­கோட்டை பெண்­க­ளின் கோட்­டை­யாக மாறி உள்­ளது என்று கூறப்­படும் நிலை­யில் அம்­மா­வட்­டத்­தில் உள்ள ஆறு சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­க­ளி­லும் ஆண்­களே எம்­எல்­ஏக்­க­ளாக உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் திமுக ஆட்சி அமைந்­ததை அடுத்து பல்­வேறு மாவட்­டங்­களில் முக்­கிய அதி­கா­ரி­கள் மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.

அந்த வகை­யில், கவிதா ராமு புதுக்­கோட்டை மாவட்ட ஆட்­சி­ய­ராக அண்­மை­யில் பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.