சிறுமிகளுடன் ஆபாசப் பேச்சு: 'யூடியூப்' மதனுக்கு வலைவீச்சு

சிறுமிகளுடன் ஆபாசப் பேச்சு: 'யூடியூப்' மதனுக்கு வலைவீச்சு

1 mins read
760fbdfa-08ad-40b3-81aa-2f053ec1dc9c
மதன். படம்: ஊடகம் -

சேலம்: 'யூடி­யூப்' மூலம் பிர­ப­லம் அடைந்த மதன் என்ற இளை­ய­ருக்கு போலி­சார் வலை வீசி உள்­ள­னர்.

இவர் இணைய விளை­யாட்­டு­களை எப்­படி ஆட வேண்­டும் என்று கற்­றுக் கொடுப்­ப­தா­கக் கூறி ஏரா­ள­மான சிறு­மி­ய­ரு­டன் ஆபா­ச­மா­கப் பேசி வந்­துள்­ளார். மேலும் சில­ரி­டம் பணம் பறித்து மோசடி செய்­த­தா­க­வும் புகார் எழுந்­துள்­ளது.

சேலத்­தைச் சேர்ந்த மதன், சிறு­மி­களை மட்­டுமே குறி­வைத்து செயல்­பட்­டுள்­ளார். இவர் ஆபா­ச­மா­கப் பேசு­வதை சில சிறு­மி­கள் ரசித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சில சிறு­மி­க­ளுக்கு அவ­ரது பேச்சு பிடிக்­க­வில்லை என்­றா­லும் இணைய விளை­யாட்டு நுணுக்­கங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக மௌனம் காத்­துள்­ள­னர்.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சேலம் போலிசார் அழைப்பாணை அனுப்பியும் மதன் இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும் திடீரென தலைமறைவாகி உள்ளார்.

இதையடுத்து சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு போலிசார் சென்றபோது அவர் அங்கு இல்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

பலரிடம் பணம் பறித்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் சேலம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.