எளிமையாக நடந்த திருமணம்; ரூ.37 லட்சத்தை மக்களுக்கு வழங்கிய தம்பதி

எளிமையாக நடந்த திருமணம்; ரூ.37 லட்சத்தை மக்களுக்கு வழங்கிய தம்பதி

1 mins read
fbdd1ce3-97ca-44b4-8d74-77f146206749
தங்களது திருமணத்தில் மிஞ்சிய தொகையை நிவாரண நிதியாக வழங்கும் புதுமணத் தம்பதி. படம்: தமிழக ஊடகம் -

தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த மணமக்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக விருந்தினர்களை அதிகம் அழைக்காமல் மிகவும் சிக்கனமாக, எளிமையான முறை யில் திருமணம் செய்துள்ளனர்.

இதன்காரணமாக திருமணச் செலவுக்காக வைத்திருந்த பணத் தில் 37 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மிஞ்சியுள்ளது.

அதை கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்கள் பயன் பெறும் விதத்தில் புதுமணத் தம்பதி வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, அவர்களை மக்கள் பலரும் மனதார வாழ்த்தி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த அருள் செல்வம் என்பவரின் மகன் அருண் பிரனேசுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனுவுக்கும் கடந்த 14ஆம் தேதி காங்கேயம் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை பிரம்மாண்டமான முறையில் நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்மாறாக மிகவும் எளிமையாக நடந்ததால் ரூ.37 லட்சம் மிஞ்சியது.

இந்தப் பணத்தை நற்காரி யங்களுக்கு செலவிட மணமக்கள் வீட்டார் முடிவு செய்தனர்.

இதன்படி, திருமணம் முடிந்த கையோடு திருப்பூர், ஈரோடு மாவட் டங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மருத்துவ உபகரணங் களைப் பொருத்தவும் கொரோனா மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மக்களுக்காகவும் நிதியுவியை வழங்கினர்.

இதுகுறித்து மணமகனின் தந்தை அருள்செல்வம் கூறுகையில், "திருமணம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்ததால் செலவு குறைந்தது. அதனால், மீதமுள்ள பணத்தை கொரோனா சிகிச்சைக்காக அளித்தோம்," என்றார்.

குறிப்புச் சொற்கள்