சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் முன்னிலை; சிபிசிஐடி போலிசார் காவலில் எடுக்க திட்டம் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை

சென்னை: பாலி­யல் புகார் தொடர்பில் கைதாகி­யுள்ள சிவ­சங்­கர் பாபா­வுக்­குச் சொந்­த­மான சுஷில்­ஹரி அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் அங்­கீ­கா­ரத்தை ரத்து செய்ய வேண்­டும் என்று காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்ட குழந்­தை­கள் நலக் குழு தமிழக அர­சுக்குப் பரிந்­துரை செய்­துள்­ளது.

பாலி­யல் குற்­றச்­சாட்டு தொடர்­பில் காசி­யா­பாத்­தில் சிவ­சங்­கர் பாபாவை சிபி­சி­ஐடி போலி­சார் கைது செய்தனர்.

அதன்பின்னர், டெல்லி நீதி­மன்­றத்­தில் அவரை முன்­னி­லைப்­படுத்தி, நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு நேரத்­தில் விமா­னம் மூலம் சென்­னைக்கு அழைத்து வந்­த­னர்.

சென்னை எழும்­பூர் அலு­வ­ல­கத்­தில் வைத்து சிவ­சங்கரிடம் விசா­ரணை செய்த சிபி­சி­ஐடி போலிசார், ேநற்று செங்கல்பட்டில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிபதி முன்பு அவரை முன்னிலைப்படுத் தினர்.

இதைத்தொடர்ந்து சிறை­யில் அடைக்கப்படும் சிவசங்கரை காவ­லில் எடுத்து விசா­ரிக்கவும் சிபி­சி­ஐடி போலி­சார் திட்­ட­மிட்டு இருப்­ப­தாகத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

செங்­கல்­பட்டு மாவட்­டம், கேளம்­பாக்­கத்­தில் உள்ள சுஷில்­ஹரி அனைத்­து­ல­கப் பள்­ளியை சிவ­சங்­கர் பாபா நடத்தி வரு­கி­றார்.

இங்­குள்ள விடு­தி­யில் தங்­கிப் படித்து வரும் மாண­வி­க­ளுக்கு சிவ­சங்­கர் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக புகார்­கள் எழுந்­தன.

இதற்கிடையே, மார­டைப்பு கார­ண­மாக உத்தரகாண்ட் மாநிலம், டேரா­டூன் மருத்­து­வ­ம­னை­யில் சிவ­சங்­கர் பாபாவுக்கு ‘ஆஞ்­சியோ பிளாஸ்டி’ சிகிச்சை வழங்கப்பட்டதை போலிசார் உறுதிப்படுத்தி­னர்.

அதேவேளையில், சுஷில்­ஹரி பள்­ளி­யில் படித்து வந்த 50% மாண வர்­கள் பள்­ளியை விட்­டுச் சென்று விட்­ட­னர். பத்து ஆசி­ரி­யர்­களும் ராஜி­னாமா செய்­து­விட்­ட­தாக தக­வல்கள் தெரிவித்தன.

மாண­வர்­க­ளின் எதிர்­கா­லத்தை கருத்­தில் கொண்டு அப்­பள்­ளி­யில் இருந்து வெளி­யே­றும் மாண­வர்­க­ளுக்கு மாற்­றுச்­சான்­றி­தழை உடனே வழங்கவேண்­டும். வெளி­யே­றும் மாண­வர்­கள் வேறு பள்­ளி­யில் சேர தமி­ழக அரசு உத­விட வேண்­டும்.

இப்­பள்­ளி­யின் அங்­கீ­கா­ரத்தை மாநில கல்­வித்­துறை ரத்து செய்ய வேண்டும் அல்­லது இப்­பள்­ளியை அரசே ஏற்று நடத்த வேண்­டு­ம் என­வும் செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம் மாவட்ட குழந்­தை­கள் நலக்­கு­ழு­மம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதேசமயம், பள்ளியில் நடத்திய சோதனையில் சிக்கிய மடிக்கணினி யில் சிவசங்கர் பாபா மாணவிகள், தொழிலதிபர்கள் மனைவிகளுடன் ஆனந்த நடனம் ஆடும் காெணாளிகளும் மாணவிகள் சிவசங்கர் பாபாவின் உடலைப் பிடித்துவிடும் காணொளிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!