எளிமையாக நடந்த திருமணம்; ரூ.37 லட்சத்தை மக்களுக்கு வழங்கிய தம்பதி

எளிமையாக நடந்த திருமணம்; ரூ.37 லட்சத்தை மக்களுக்கு வழங்கிய தம்பதி

2 mins read
bc6ec78f-a55f-4eb6-9a8a-2d08b53a8ecf
தங்களது திருமணத்தில் மிஞ்சிய தொகையை நிவாரண நிதியாக வழங்கும் புதுமணத் தம்பதிகள். படம்: தமிழக ஊடகம் -

திருப்­பூர்: திருப்­பூ­ரைச் சேர்ந்த மண­மக்­கள் ஊர­டங்கு உத்­த­ரவு கார­ண­மாக விருந்­தி­னர்­களை அதி­கம் அழைக்­கா­மல், மிக­வும் சிக்கனமாக, எளி­மை­யான முறை யில் திருமணம் செய்துள்ளனர்.

இதன் கார­ண­மாக திரு­ம­ணச் செல­வுக்காக வைத்­தி­ருந்த பணத் தில் ரூ.37 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மிஞ்சியுள்ளது.

அதை கொரோனா நிவா­ரண நிதி­யாக பொதுமக்கள் பயன் பெறும் விதத்தில் புதுமணத் தம்­ப­தி­கள் வழங்கியுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, அவர்களை மக்கள் பலரும் மனதார வாழ்த்தி வருகின்­ற­னர்.

திருப்­பூ­ரைச் சேர்ந்த அருள் செல்­வம் என்­ப­வ­ரின் மகன் அருண் பிர­னே­சுக்­கும் திருப்­பூ­ரைச் சேர்ந்த தொழி­ல­தி­ப­ரின் மகள் அனு­வுக்­கும் கடந்த 14ஆம் தேதி காங்­கே­யம் வட்­ட­மலை அங்­கா­ளம்­மன் கோவி­லில் மிகவும் எளி­மை­யாகத் திரு ம­ணம் நடந்தது.

இந்த திரு­ம­ணத்தை பிரம்­மாண்­ட­மான முறை­யில் நடத்த இரு வீட்­டா­ரும் திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யில், அதற்கு எதிர்மாறாக மிகவும் எளி­மை­யாக நடந்­த­தால் ரூ.37 லட்­சம் மிஞ்­சி­யது.

இந்­தப் பணத்தை நற்­காரி யங்களுக்குச் செலவிட மண­மக்­கள் வீட்­டார் முடிவு செய்­த­னர்.

இதன்­படி, திரு­ம­ணம் முடிந்த கையோடு திருப்­பூர், ஈரோடு மாவட் டங்­களில் உள்ள அரசு மருத்­துவ மனை­க­ளில் மருத்துவ உபகரணங் களைப் பொருத்தவும் கொரோனா மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள முடியாமல் தத்தளிக்கும் மக்களுக்காகவும் ரூ.37 லட்­சத்து 66,000 நிதி­யு­தவியை வழங்கினர்.

இது­கு­றித்து மண­ம­க­னின் தந்தை அருள்­செல்­வம் கூறு­கை­யில், "திரு­மணம் கொரோனா விதி­முறைகளைப் பின்பற்றி நடந்­த­தால் செலவு குறைந்­தது. அத­னால், மீத­முள்ள பணத்தை கொரோனா சிகிச்சைக்காக அளித்­தோம்," என்­றார்.