ஸ்டாலின்: மனநிறைவு தந்த சந்திப்பு

25 தலைப்புகளில் 62 பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் 'மெகா' கோரிக்கைப் பட்டியல்

புது­டெல்லி: தமிழ்­நாட்­டின் முதல் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­ற­பின் மு.க. ஸ்டா­லின் முதன்­மு­றை­யாக நேற்று முன்­தி­னம் பிர­த­மர் நரேந்­திர மோடியை நேரில் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது, அவர் 25 தலைப்­பு­களில் 62 பிரச்­சினை­கள் குறித்து பிர­த­மர் மோடி­யி­டம் ஒரு 'மெகா' கோரிக்கை பட்­டி­யலை அளித்­தார்.

கூடு­தல் தடுப்­பூ­சி­கள், ஜிஎஸ்டி நிலு­வைத்­தொ­கையை முழு­மை­யாக வழங்­கு­தல், 'நீட்' மருத்­துவ நுழை­வுத் தேர்வு ரத்து, புதிய கல்­விக் கொள்­கை­யைத் திரும்­பப் பெறு­தல், திருக்­கு­றளை தேசிய நூலாக அறி­வித்­தல், மீன­வர் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு, தமி­ழ­கத்­தில் உள்ள இலங்கை அக­தி­க­ளுக்கு நிரந்­த­ரக் குடி­யு­ரிமை, கச்­சத்­தீவு மீட்பு, மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையை விரை­வா­கக் கட்டி முடித்­தல் உள்­ளிட்ட கோரிக்­கை­கள் அப்­பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.

பிர­த­ம­ரைச் சந்­தித்­த­பின் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்­வர், "கொவிட்-19 பர­வல் கார­ண­மாக முன்­கூட்­டியே பிர­த­ம­ரைச் சந்­திக்க முடி­ய­வில்லை. அவ­ரு­ட­னான சந்­திப்பு மன­நி­றைவு தரு­கிறது. தமிழ்­நாட்­டின் வளர்ச்­சித் திட்­டங்­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கப் பிர­த­மர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்," என்று சொன்­னார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்­கில் தண்­டனை பெற்று வெகு­கா­ல­மா­கச் சிறை­யில் இருக்­கும் தமி­ழர் எழு­வ­ரின் விடு­தலை குறித்து அதி­பரி­டம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வைப் பொறுத்து முடி­வெ­டுப்­போம் என்­றும் அவர் கூறி­னார்.

தேர்­த­லின்­போது திமுக வழங்­கிய வாக்­கு­று­தி­கள் தொடர்ந்து நிறை­வேற்­றப்­படும் என்ற அவர், மதுக்­க­டை­கள் படிப்­ப­டி­யாக மூடப்­படும் என்­றும் குறிப்­பிட்­டார்.

அரசுமுறைப் பய­ண­மாக டெல்லி சென்ற முதல்­வர் ஸ்டாலின், நேற்று காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யை­யும் ராகுல் காந்தி எம்.பி.யையும் சந்­தித்­த­பின் மாலை­யில் சென்னை திரும்­பி­னார்.

இத­னி­டையே, நாளை மறு­நாள் காலை­யில் தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு நிறை­வு­றும் நிலை­யில், அதை நீட்­டிப்­பது தொடர்­பில் மருத்­துவ நிபு­ணர்­கள், அதி­கா­ரி­க­ளு­டன் முதல்­வர் இன்று ஆலோ­சனை நடத்­த­வுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!