துபாயில் தொற்றால் தாய் மரணம்; 11 மாத குழந்தை மீட்டு வரப்பட்டது

துபாயில் தொற்றால் தாய் மரணம்; 11 மாத குழந்தை மீட்டு வரப்பட்டது

1 mins read
c7aa73f3-f5b1-4015-9e52-783675a9e71f
திருச்சி விமான நிலையத்தில் கண்களில் நீர் பெருக, மகன் தேவேஷை ஆரத் தழுவி, முத்தமிட்ட தந்தை வேலவன் ராஜா. படம்: தமிழக ஊடகம் -

திருச்சி: துபாய்க்கு வேலைக்­குச் சென்ற பெண் கொவிட்-19 தொற்­றால் இறந்­து­விட, ரத்த சொந்­தங்­கள் எவ­ரு­மின்றி இரு வாரங்­க­ளா­கத் தவித்து வந்த 11 மாதக் குழந்தை தமி­ழக அர­சின் உத­வி­யால் மீட்டு வரப்­பட்டு, தந்­தை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான்.

கள்­ளக்­கு­றிச்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் வேல­வன் ராஜா - பாரதி தம்­பதி­யர். நிலத்தை விற்­றுச் செலவு செய்­தும் இவர்­க­ளின் மூத்த மகன் விக்­னேஷ்­வ­ரன், 10, சிறு­நீ­ர­கப் பிரச்­சினை கார­ண­மா­கச் சென்ற ஆண்டு இறந்­து­விட்­டான்.

இதை­ய­டுத்து, நிதிப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­காக கைக்­கு­ழந்­தை­யான தமது மூன்றாவது மகன் தேவே­ஷு­டன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு வேலைக்­குச் சென்­றார் பாரதி. 2வது மகன் அகி­லன், 7, தந்­தை­யு­டன் தமி­ழ­கத்­தி­லேயே வசித்து வந்­தான்.

இந்­நி­லை­யில், கடந்த மே 29ஆம் தேதி கொரோனா தொற்­றால் பாரதி இறந்­து­விட, அங்­கேயே அவ­ரது உடல் தக­னம் செய்­யப்­பட்­டது.

இந்­தத் துயர நிகழ்வை அறிந்த முதல்­வர் ஸ்டா­லின், தேவேஷ் தமிழ்­நாடு திரும்­பத் தேவை­யான ஏற்­பா­டு­களை செய்­தார். இதையடுத்து, தாயின் அஸ்தியுடன் நேற்று முன்­தி­னம் தேவேஷ் திருச்சி விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தான்.

தம் மகன் நாடு திரும்ப உத­வி­ய முதல்­வ­ருக்கு நன்­றி­கூ­றிக்­கொண்ட திரு வேல­வன், "அடுத்து என்ன செய்­வது எனத் தெரி­ய­வில்லை. ஆனாலும், என் பிள்­ளை­களுக்கு நல்ல வாழ்க்­கையை ஏற்­படுத்­தித் தர என்­னா­லான அனைத்­தை­யும் செய்­வேன்," என்­றார்.