பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் மதன் காலில் விழுந்து கதறல்

பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் மதன் காலில் விழுந்து கதறல்

2 mins read
38b9c254-296d-43e1-9f38-46ff2b4f52da
கைது செய்யப்பட்ட மதன். படம்: ஊடகம் -

சேலம்: 'யூ டியூப்' மூலம் ஆபாச­மா­கப் பேசி லட்­சக்­க­ணக்­கில் சம்­பா­தித்ததாகக் கூறப்படும் மதனை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

29 வய­தான மதன், தன்­னைக் கைது செய்ய வேண்­டாம் என்று போலி­சார் காலில் விழுந்து கதறி அழு­தார் என 'தினத்­தந்தி' நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மத்­திய அர­சால் தடை செய்­யப்­பட்­டுள்ள இணைய விளை­யாட்டை ஆடி வந்­துள்­ளார் மதன். இந்த விளை­யாட்­டில் இணை­யம் வழி அவ­ரு­டன் ஏரா­ள­மானோர் இணைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ஆபா­ச­மான கருத்­து­களை கூறி, பெண்­களை இவர் தரக்­கு­றை­வா­கப் பேசு­வது குறித்து சென்­னை­யைச் சேர்ந்த ஒரு­வர் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­ட­போது சேலத்­தில் இருந்த மதன் தலை­ம­றை­வா­னார். எனவே, 25 வய­தான இவ­ரது மனைவி கிருத்­தி­காவை அவர் பெற்­றெ­டுத்த 8 மாதக் கைக்­கு­ழந்­தை­யு­டன் போலி­சார் கைது செய்­த­னர். அவர் பின்­னர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் தர்­ம­பு­ரி­யில் தமது நண்­பர் வீட்­டில் தங்­கி­யி­ருந்த மதனை போலி­சார் நேற்று முன்­தி­னம் காலை அதி­ர­டி­யா­கக் கைது செய்­த­னர். அவர் மேலிட விசா­ர­ணைக்­காக சென்­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் போலி­சார் தன்­னைக் கைது செய்­த­போது யாரும் எதிர்­பா­ராத வகை­யில் திடீ­ரென அவர்­க­ளது காலில் விழுந்து கதறி அழு­துள்­ளார் மதன்.

தாம் தெரி­யா­மல் தவறு செய்­து­விட்­ட­தா­கக் கூறி கண்­ணீர் விட்ட அவ­ரி­டம் போலி­சார் தற்­போது தீவிர விசா­ர­ணை­யைத் தொடங்கி உள்­ள­னர்.

மத­னி­டம் இருந்து சொகுசு கார், நான்கு மடிக்­க­ணி­னி­கள், சிறிய ரக ஆளில்லா விமா­னம் உள்­ளிட்ட பொருள்­களை போலி­சார் கைது செய்­துள்­ள­னர். மேலும், அவர் கடந்த மூன்று ஆண்­டு­களில் மட்­டும் ரூ.75 கோடி பணம் சேர்த்­துள்­ள­தா­க­வும் 'மாலைமலர்' நாளேடு செய்தி தெரி­விக்­கிறது.