முன்விரோதம்: அதிமுக, திமுகவினர் திடீர் மோதல்

முன்விரோதம்: அதிமுக, திமுகவினர் திடீர் மோதல்

1 mins read
ef863948-943b-490c-b39e-17fef1f2e8a8
-

விருதுநகர்: தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக, அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்துள்ள அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான ரவிகாந்த் திமுகவில் உள்ளார்.

இவருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுகவின் முத்துவுக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே முத்துப்பட்டி பேருந்து நிலையத்தில் திடீர் மோதல் வெடித்தது.

பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதலால் திருச்சுழி பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்தவர்களின் கிராமங்களிலும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த மோதல் குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.