எதிர்த்தரப்பினரை சமாளிப்பது பற்றி திமுக ஆலோசனை

2 mins read
ed82e5e0-9cd8-47d8-95cd-55a015579005
-

முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; ஆளுநர் உரையாற்றுகிறார்

சென்னை: சட்­ட­மன்­றத்­தில் விருப்பு வெறுப்­புக்கு இட­மின்றி உறுப்­பி­னர்­கள் பேச நேரம் ஒதுக்­கப்­படும் என்­றும் ஜன­நா­யக முறைப்­படி அனை­வ­ருக்­கும் உரிமை வழங்­கப்­படும் என்­றும் சபா­நா­ய­கர் அப்­பாவு கூறி­யுள்­ளார். தமி­ழ­கத்­தின் 16 வது சட்­டப் பேர­வை­யின் முதல் கூட்­டத்­தொ­டர் நாளை ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்­குத் தொடங்­கு­கிறது. ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­கித் உரை­யாற்றி கூட்­டத்­தொ­ட­ரைத் தொடங்கி வைக்­கி­றார்.

இதற்­கான ஏற்­பா­டு­கள் குறித்து முக்­கிய துறை அலு­வ­லர்­க­ளு­ட­னான கலந்­தாய்­வுக் கூட்­டம் சபா­நா­ய­கர் அப்­பாவு தலை­மை­யில் வெள்­ளிக்­கி­ழமை நடந்­தது. துணை சபா­நா­ய­கர் பிச்­சாண்டி, அரசு கொறடா கோவி செழி­யன் மற்­றும் பல்­வேறு துறை அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

இந்­தக் கூட்­டத்­திற்­குப் பின்­னர் அப்­பாவு கூறு­கை­யில், "சட்­ட­சபை கூட்­டத் தொடரை நேர­டி­யாக ஒளி­ப­ரப்ப வேண்­டும் என்­பது எங்­க­ளின் நிலைப்­பாடு. அது கட்­டா­யம் நிறை­வேற்­றப்­படும். 'நீட்' தேர்வு குறித்த பாதிப்­பு­களை ஆராய, ஓய்வு பெற்ற நீதி­பதி ஏ.கே.ராஜன் தலை­மை­யில் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அக்­குழு ஆராய்ந்து பரிந்­து­ரை­களை அளிக்­கும்.

"பிர­த­மர் மோடியை முதல்­வர் ஸ்டா­லின் சந்­தித்­த­போது இது­தொ­டர்­பாக வலி­யு­றுத்தி உள்­ளார். நீட் தேர்வு குறித்து விரை­வில் நல்ல முடிவு வரும். சட்­ட­ச­பை­யில் ஜன­நா­யக முறைப்­படி, விருப்பு வெறுப்­பின்றி நேரம் ஒதுக்­கப்­படும்," என்று அவர் கூறி­னார்.

இதன்­பின் சபா­நா­ய­கர் அப்­பாவு, ஆளு­நர் மாளி­கை­யான ராஜ் பவ­னுக்­குச் சென்று ஆளு­நர் கவர்­னர் பன்­வா­ரி­லால் புரோ­கித்­தைச் சந்­தித்­தார். சட்­ட­ச­பை­யில் உரை­யாற்ற வரும்­படி முறைப்­படி அவர் அழைப்பு விடுத்­தார்.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

இந்­நி­லை­யில், சட்­டப் பேரவை கூட்­டத் தொடரை ஒட்டி நாளை திங்­கட்­கி­ழமை திமுக எம்­எல்­ஏக்­க­ளின் கூட்­டம் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­விப்பை அரசு தலை­மைக் கொறடா கோவி. செழி­யன் வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்டாா்.

அவ­ரது அறி­விப்­பில், "திமுக சட்­டப் பேரவை உறுப்­பி­னா்­கள் கூட்­டம் வரும் 21ஆம் தேதி (திங்­கள்­கி­ழமை) மாலை 5 மணிக்கு அண்ணா அறி­வா­ல­யம் கலைஞா் அரங்­கத்­தில் நடை­பெ­றும். கட்­சித் தலை­வ­ரும், முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நடை­பெ­றும் கூட்­டத்­தில் திமுக உறுப்­பி­னா்­கள் அனை­வ­ரும் கலந்­து­கொள்ள வேண்­டும்," என்று கூறப்­பட்டு உள்­ளது.

ஆட்­சிப் பொறுப்­பேற்ற பிறகு முதல் முறை­யாக புதி­தா­கத் தோ்ந்தெ­டுக்­கப்­பட்ட திமுக எம்­எல்­ஏக்­க­ளின் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தக் கூட்­டத்­தில் எதிா்க்­கட்­சி­க­ளின் விமா்ச­னங்­க­ளுக்கு பதில் அளிப்­பது, எப்­படி பேர­வை­யில் உரை­யாற்­று­வது என்­பன போன்ற பல்­வேறு அறி­வு­ரை­கள் அளிக்­கப்­படும் எனத் தெரி­கிறது.