பங்ளாதேஷ் பெண்ணை பாலியல் பெண்ணாக்கியவர்கள் கைது

பங்ளாதேஷ் பெண்ணை பாலியல் பெண்ணாக்கியவர்கள் கைது

1 mins read
2344e6ef-120a-40b5-bac5-2af47f2ef928
-

கோவை: பங்­ளா­தே­ஷி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக இந்­தி­யா­வுக்­குள் நுழைந்த பெண் ஒரு­வர் கோவை­யில் பாலி­யல் தொழி­லில் தள்­ளப்­பட்­டார். அந்­தப் பெண் உள்­ளிட்ட நால்­வரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

சில தினங்­க­ளுக்கு முன்பு கோவை சர­வ­ணம்­பட்டி மகா நகர் பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றில் போலி­சார் திடீர் சோதனை நடத்­தி­னர்.

அப்­போது அந்த வீட்­டில் இரண்டு பெண்­கள், இரண்டு ஆண்­கள் இருந்­துள்­ள­னர்.

கேர­ளா­வைச் சேர்ந்த அஜித் மோன், கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த மஹந்த்ஷா ஆகிய இரு­வ­ரும் கேர­ளா­வைச் சேர்ந்த பெண் ஒரு­வரை பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்தி வந்­துள்­ள­னர்.

சில மாதங்­க­ளுக்கு முன் மேற்கு வங்­காள மாநி­லம் வழி­யாக இந்­தி­யா­வுக்­குள் நுழைந்த பங்­ளா­தேஷ் பெண் ஒரு­வர் கோவை காந்­தி­பு­ரம் பகு­தி­யில் உள்ள ஒரு வீட்­டில் பணிப்­பெண்­ணாக வேலை செய்­தார்.

அவரை அஜித் மோன் மற்­றும் மஹந்த்ஷா வலுக்­கட்­டா­ய­மாக பாலி­யல் தொழி­லில் ஈடு­பட வைத்­த­தாக அவர் போச­லி­சி­டம் கூறி­யுள்­ளார்.

இது­கு­றித்து வழக்­குப்­ப­திவு செய்த சர­வ­ணம்­பட்டி போலி­சார், அஜித்­மோன் மற்­றும் மஹந்த்ஷா ஆகி­யோரை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி உட­ன­டி­யாக சிறை­யில் அடைத்­த­னர்.

பெண்­கள் இரு­வ­ரு­ரை­யும் காப்­ப­கத்­துக்கு அனுப்ப உத்­த­ர­விட்­ட­னர்.

இருப்­பி­னும் பங்­ளா­தேஷ் பெண் சட்­ட­வி­ரோ­த­மாக இந்­தி­யா­வுக்குள் நுழைந்­த­தால் அவர் மீது வெளி­நாட்­டி­னர் சட்­டம் 1946ன் கீழ் வழக்­குப்­ப­திவு செய்து, சென்னை புழல் சிறை­யில் அடைத்­த­னர்.

அந்­தப் பெண் தொடர்­பான தக­வலை பங்­ளா­தேஷ் போலி­சா­ருக்­கும் மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ ச­கத்­துக்­கும் போலி­சார் அறிக்கை அனுப்­பி­யுள்­ள­னர்.