திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜவகர் பரளிப் புதூர் சோதனைச்சாவடி யில் சில தினங்களுக்கு முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத் திய ஜவகர், ஓட்டுநரிடம் ஆவணங்களை கேட்டார். அத்துடன் 50 ரூபாய் லஞ்ச மாக ஓட்டுநரிடம் அவர் வாங் கினார். இதை வாகனத்தில் இருந்த சிலர் கைபேசியில் படம் பிடித்து சமூகத்தளத்தில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரி ஜவகர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ரூ.50 லஞ்சம் வாங்கிய போலிஸ்
1 mins read
-

