செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a7d9ec65-f750-4251-b3ec-846ce87d10a1
-

முன்னணி எழுத்தாளர்களின்

படைப்புகளுக்காக ஒரு செயலி

சென்னை: தமிழ் இலக்­கி­யத்­தில் சத்­த­மில்­லா­மல் ஒரு மாறு­தல் நிகழ்ந்­து­ வ­ரு­கிறது. அது­தான் 'பிஞ்' செயலி (Bynge). ஜன­ரஞ்­சக எழுத்­து­ல­கின் முன்­னணி எழுத்­தா­ளர்­க­ளி­லி­ருந்து தீவிர இலக்­கி­யப் புனை­க­தை­யா­ளர்­க­ளின் படைப்­பு­கள் வரை இச்­செ­ய­லியை அலங்­க­ரிக்­கின்­றன. ராஜேஷ்­கு­மார், பட்­டுக்­கோட்டை பிர­பா­கர், இந்­திரா சௌந்­தர்­ரா­ஜன், ஜி.ஆர்.சுரேந்­தர்­நாத், சாரு நிவே­திதா, பா.ராக­வன், எஸ்.செந்­தில்­கு­மார், அராத்து, லஷ்மி சர­வ­ண­கு­மார், காஞ்­சனா ஜெய­தி­ல­கர், சு.தமிழ்ச்­செல்வி போன்­றோ­ரின் படைப்­பு­களை இதில் காண­லாம். எத்­தனை பேர் தங்­கள் எழுத்­து­க­ளைப் படிக்­கி­றார்­கள், அவர்­க­ளின் விமர்­ச­னங்­கள் என்­னென்ன என்­ப­தை­யெல்­லாம் உட­னுக்­கு­டன் எழுத்­தா­ளர்­கள் தெரிந்­து­கொள்ளமுடி­யும். கல்கி, அண்ணா, சாவி போன்­றோ­ரின் படைப்­பு­களும் படிக்­கக் கிடைக்­கின்­றன. 'பிஞ்' செயலி வருங்­கா­லத்­தில் கிண்­டில் வெளி­யீ­டு­போல் உரு­வா­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கிறது என்­கி­றார்­கள் எழுத்­தா­ளர்­கள்.

'தொழில் தர்மத்திற்கான திருக்குறள்'

சென்னை: திருக்குறளைப் பாடமாக அறிமுகம் செய்ய இருக் கிறது சென்னை பல்கலைக்கழகம். இதற்கான அறிவிப்பை துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ளார். 'தொழில் தர்மத் திற்கான திருக்குறள்' என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இள நிலை மாணவர்களுக்குத் திருக்குறள் பாடமாக அறிமுகம் ஆகிறது எனவும் அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உதவியாளர்களும் ஓடிவிட்டனர்

சென்னை: நடிகை சாந்தினியின் பாலியல் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளனர். தங்களது கைபேசிகளை அணைத்துவிட்டு ஓட்டுநரும் உதவியாளர்களும் தலைமறை வாகிவிட்டனர். மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனால் இரண்டு தனிப்படைகளை அமைத்து மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் அவரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஏடிஎம் கொள்ளை; ஒருவர் கொலை

திருவாரூர்: திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலை யில் உள்ள கூடூரில் ஏடிஎம் இயந்திரத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் உடைக்க முயற்சி செய்தது. சப்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடி வந்து அவர்களைப் பிடிக்க முயன்றபோது நடைபெற்ற தாக்குதலில் தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து வந்த தாலுகா போலிசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், 18, பிரதாப், 19, ஆகாஷ்,20, விஜய்,19, ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.