மரம் விழுந்து பெண் பலி

மரம் விழுந்து பெண் பலி

1 mins read
b751d44c-5482-4167-9d63-d643e8955caa
மரம் விழுந்ததால் உயிரிழந்த தரணி. படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்­கெ­டுக்கும் பணி­யில் ஆர்­வ­மாக ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த முன்­க­ளப் பெண் பணி­யா­ளர் மீது மரம் ஒன்று திடீரென்று முறிந்து விழுந்­த­தில் அவர் உயி­ரி­ழந்துள்ளார்.

சென்­னையை அடுத்த நந்­தம்­பாக்­கம் பகுதியைச் சேர்ந்­த­வர் மோகன். இவ­ரு­டைய மனைவி தரணி, 27.

இவர், கடந்த ஆண்டு முதல் சென்னை மாந­க­ராட்­சி­யில் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணியில் நியமிக்கப்பட்டு, வீடு வீடா­கச் சென்று கிரு­மித்தொற்று உள்­ளதா என்பது குறித்து கணக்­கெ­டுத்து வந்தார்.

கடந்த 5ஆம் தேதி இதுபோல் நந்­தம்­பாக்­கம் பகு­தி­யில் அவர் பணி­யில் ஈடு­பட்டுக்கொண்டி ருந்தபோது, சாலை­யோ­ரம் இருந்த மரம் ஒன்று முறிந்து தரணி மீது விழுந்­தது.

இதில் தலை­யில் பலத்த காயமடைந்த தர­ணியை மீட்டு சென்னை அரசுப் பொது மருத் துவமனையில் சேர்த்­த­னர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் தரணி உயி­ரி­ழந்­தார்.

இதுகுறித்து, நந்­தம்­பாக்­கம் போலிஸ் அதிகாரி சாலை­ராம் சக்தி­வேல் விசா­ரணை நடத்தி வரு­கி றார்.

தர­ணிக்கு ராகுல், 9, என்ற மக­னும் கவிதா, 8, என்ற மகளும் உள்­ள­தால், ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் இருந்­தா­லும் தர­ணிக்கும் முன்­களப் பணி­யா­ளர்­க­ளுக்­கான சலுகைகளை அரசு வழங்கவேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது.