மேலும் சில தளர்வுகளுடன் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு பேருந்து இயங்க அனுமதி 50% பயணிகளுடன் பேருந்துப் பயணம்

மேலும் சில தளர்வுகளுடன் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு பேருந்து இயங்க அனுமதி 50% பயணிகளுடன் பேருந்துப் பயணம்

2 mins read
c78f2a78-bfc7-4d1b-b68b-4eba9c290094
இன்று முதல் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று பேருந்துகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கின. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் இன்று 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரத்­துக்கு கூடு­தல் தளர்­வு­க­ளு­டன் ஊர­டங்கு நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மிப் பாதிப்பு குறைந்த 27 மாவட்­டங்­க­ளுக்­குள் அனைத்து வகை கடை­களையும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை திறப்­ப­தற்கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­களுக்கு இடையே 50% பய­ணி­க­ளு­டன் பேருந்­து­களை இயக்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

மெட்ரோ ரயில்­களும் 50% பய­ணி­க­ளு­டன் இயக்­கப்­பட உள்­ளன.

மாநி­லத்­தில் உள்ள 38 மாவட்­டங்களை மூன்­று வகையாகப் பிரித்து, இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தளர்­வு­கள் குறித்த விவரங்களை அரசு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.

வகை 1- (11 மாவட்­டங்­கள்)

கோயம்­புத்­தூர், நீல­கிரி, திருப்­பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்­கல், தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்பட்­டி­னம், மயி­லா­டு­துறை மாவட்­டங்­கள்.

தொற்று பாதிப்பு அதி­கமுள்ள இந்த 11 மாவட்­டங்­க­ளி­லும் புதிய தளர்­வு­கள் இல்லை, தற்­போ­தைய நிலையே தொட­ரும் என அரசு அறி­வித்­துள்­ளது.

வகை 2 - (23 மாவட்­டங்­கள்)

அரி­ய­லூர், கட­லூர், தரு­ம­புரி, திண்­டுக்­கல், கள்­ளக்­கு­றிச்சி, கன்­னி­யா­கு­மரி, கிருஷ்­ண­கிரி, மதுரை, பெரம்­ப­லூர், புதுக்­கோட்டை, இரா­ம­நா­த­பு­ரம், இரா­ணிப்­பேட்டை, சிவ­கங்கை, தேனி, தென்­காசி, திரு­நெல்­வேலி, திருப்­பத்­தூர், திரு­வண்­ணா­மலை, தூத்­துக்­குடி, திருச்­சி, விழுப்­பு­ரம், வேலூர், விரு­து­ந­கர் மாவட்­டங்­கள்.

இம்­மா­வட்­டங்­களில் பல­ச­ரக்கு, இறைச்சி, மீன், காய்­கறிகள், பழம், பூ விற்­பனை உள்ளிட்ட அைனத்துக் கடைகளும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்­பட அனு­ம­திக்­கப்­படும். உண­ வ­கங்­களில் 'பார்­சல்' சேவை காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனு­ம­திக்­கப்­படும்.

அர­சின் அனைத்து அத்­தி­யா­வ­சி­யத் துறை­களும் 100% பணி­யா­ளர்­க­ளு­டன் செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்டு உள்ளது.

மூன்றாவது பிரிவாக சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­களும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் கிரு­மித்­தொற்­றின் தீவி­ரம் குறை­வாக இருப்பதால், குளிர்சாதன வச­தி­யில்­லாத பேருந்து களில் 50% இருக்கைக­ளில் மட்­டும் பய­ணி­கள் அமர்ந்து பய­ணம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல், மெட்ரோ ரயில் போக்­கு­வ­ரத்­தி­லும் 50% இருக்­கை­களில் மட்­டும் பய­ணி­கள் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கப்­படும். வாடகை கார்களில் ஓட்­டு­நர் தவிர மூன்று பய­ணி­களும் ஆட்­டோக்­களில் ஓட்­டு­நர் தவிர இரு பய­ணி­களும் பய­ணம் செய்யலாம்.