முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

2 mins read
8d329561-de1a-477e-ba52-8b3a227f83e0
கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் புகார் அளித்த நடிகை சாந்தினி. படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

பெங்­க­ளூரு: திரைப்­பட நடிகை சாந்­தினி அளித்த பாலி­யல் புகார் தொடர்­பில் அதி­முக முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டன் கைது செய்­யப்­பட்­டார்.

பெங்­க­ளூரில் பதுங்­கி­யி­ருந்த அவரை நேற்­று­ காலை தனிப்­படை போலி­சார் கைது செய்­த­னர்.

பெங்­க­ளூ­ரில் நண்­பர் ஒரு­வ­ரது பண்ணை வீட்­டில் மணி­கண்­டன் தங்­கி­யி­ருப்­ப­தாக கிடைத்த ரக­சிய தக­வ­லைத் தொடர்ந்து நேற்று முன்­தி­னம் இரவு தனிப்­படை போலி­சார் அங்கு விரைந்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து, நேற்று காலை அவர் இருக்­கும் இடத்­தைக் கண்­டு­பி­டித்த போலி­சார் மணி­கண்­ட­னைச் சுற்றி வளைத்­துக் கைது செய்­த­னர்.

அதன் ­பின்­னர், உண­வ­கம் ஒன்­றில் போலி­சார், மணி­கண்­ட­னுக்கு காலை உணவை வாங்­கிக் கொடுத்­த­னர். அதைச் சாப்­பிட்ட மணி­கண்­டனை உட­ன­டி­யாக சென்­னைக்கு போலிஸ் வாக­னத்­தில் ஏற்றி அழைத்து வந்­தார்கள்.

அவ­ருக்கு மருத்­து­வப் பரிசோ தனை செய்­யப்­பட்ட பிறகு நீதி­பதி முன் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார் என தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

தன்­னைத் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தாக ஏமாற்­றி­யது, மிரட்­டி­யது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் குறித்து மணி­கண்­டன் மீது அடை­யாறு அனைத்து மக­ளிர் காவல்­நி­லை­யத்­தில் சாந்­தினி புகார் அளித்­தி­ருந்­தார். ஆறு பிரி­வு­க­ளின் கீழ் மணி­கண்­டன் மீது வழக்குப் பதிவு செய்து விசா­ரணை மேற்­கொண்ட நிலை­யில், "நடிகை சாந்­தினி யார் என்றே தனக்குத் தெரி­யாது," என்று மணி­கண்­டன் தெரி­வித்­தி­ருந்­தார்.

கைது நட­வ­டிக்­கை­யைத் தவிர்க்­கும் வகை­யில் முன்பிணை கோரிய மணி­கண்­ட­னின் மனுவை அண்­மை­யில் உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது. அத­னைத் தொடர்ந்து தலை­ம­றை­வான மணி­கண்­டனை இரு தனிப்­ப­டை­கள் அமைத்து தேடி வந்த போலி­சார் பெங்­க­ளூ­ரில் கைது செய்­த­னர்.