முன்னாள் அைமச்சர் ஆக்கிரமித்த 10 ஏக்கர் நிலம் மீட்பு

1 mins read
ef76ac80-5ce8-4a82-a022-31922f837c34
-

சிவகங்கை: சிவகங்கையில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் அபகரித்ததாகக் கூறப்படும் ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.

சிவகங்கையில் கவுரி விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான 9.58 ஏக்கர் நிலத்தில், முறைகேடாக மின் இணைப்பு பெற்று வணிக வளாகம் கட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, இந்து அறநிலைய உதவி ஆணையர் செல்வி, தாசில்தார் தர்மலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் போலிஸ் பாதுகாப்புடன் சென்று, ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த வணிக வளாகக் கட்டடம், காலி யிடங்களில் அமைத்திருந்த கம்பி வேலிப் பகுதிகளைப் பூட்டி 'சீல்' வைத்தனர்.

"கோவிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்ற எச்சரிக்கைப் பலகையும் அங்கு வைக்கப்பட்டது.

அறநிலைய உதவி ஆணையர் செல்வி கூறுகையில், "ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்குமாறு தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்த தைத் தொடர்ந்து, இந்த இடத்தை ஆய்வு செய்து வணிக வளாகத்திற்கு 'சீல்' வைத்துள்ளோம்," என்று கூறினார்.

கோயில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டதில் எனக்கோ என் குடும்பத்திற்கோ எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த ஐந்தாண்டுகளாக அமைச்சராக இருந்தபோது எவ்வித புகாரும் இல்லை. இந்த பொய்ப் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்