திருச்சுழி: கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட குச்சம்பட்டி கிராம மக்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிப் போட்டுவிட்டு, சொந்த ஊரை காலி செய்துகொண்டு பிழைப்பு தேடி சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
இருப்பினும், விருதுநகர் மாவட் டம், திருச்சுழி அருகே உள்ள குச்சம்பட்டியில் சுபாஷ் சந்திரபோஸ், 76, என்ற வைத்தியரும் அவரது மனைவி சீத்தாலட்சுமி, 64, என்ற தம்பதியர் மட்டும் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இடிந்து விழும் நிலையில் தங்க ளது வீடு இருப்பதால், அரசு வீடு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, குச்சம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தம்பதியரைச் சந்தித்த ஆட்சி யர், பசுமை வீடு திட்டத்தின் கீழ் சுபாஷ் சந்திரபோஸ் தம்பதிக்கு வீடு கட்டித் தரு வதற்கான அரசாணையை வழங்கி னார். இதனால் மகிழ்ச்சியடைந்த தம்பதி யர் மனதார நன்றி தெரிவித்தனர்.

