சென்னை: மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் ரூ.5,000 ரூபாயாக இருந்தாலும்கூட புகார் அளிக்கலாம் என இணைய குற்றத் தடுப்புப் போலிசார் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட இள வயதினரிடம் இருந்து பண மோசடி புகார்கள் வந்திருப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் தெரிவித்துள்ளனர்.
பணம் அனுப்பியதற்கான ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
மதன் வங்கிக் கணக்கில் முடக்கப்பட்ட பணத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பிக் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் மதன் இணைய விளையாட்டுகளை எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதாகக் கூறி ஏராளமான சிறுமியருடன் ஆபாசமாகவும் அருவருக் கத்தக்க வகையிலும் பேசி வந்துள்ளார். இதற்கு அவரது மனைவி கிருத்திகாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
அத்துடன், யூடியூப் ஒளிவழி மூலம் வரும் வருவாயை ஏழைக் குழந்தைகள், ஆதரவற்றோருக்கு செலவிடுவதாகக் கூறி தன்னை பின்தொடரும் இளவயதினரிடம் இருந்து லட்சக்கணக்கில் மதன் பணம் பறித்ததாகவும் குற்றச் சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில், யூடியூப் நிர்வாகியாக இருந்த அவரு டைய மனைவி கிருத்திகா, மதன் இருவரும் கைதாகினர். தனது எட்டு மாத கைக்குழந்தை யுடன் கிருத்திகா சிறையில் அடைக்கப்பட்டார். மதனும் கிருத்திகாவும் பதிவேற்றிய 530 இணைய விளையாட்டு ஆபாசக் காெணாளிகளை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

