ஆளுநர்: வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழில் படித்தால் அரசுப் பணியில் முன்னுரிமை

3 mins read
bbcd909f-15cb-49a5-ac3d-4241d1e65a30
-

சென்னை: தமிழக சட்டசபையின் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழில் 'காலை வணக்கம்' என்று கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "தமிழ் இனிமையான மொழி," என்றும் புகழாரம் சூட்டி னார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், "தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க அரசு தொடர்ந்து பாடு படும்," என்று குறிப்பிட்டார்.

அத்துடன், "தமிழ்மொழி வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக் கப்படும். அதை தமிழக அரசு உறுதி செய்யும்," என்றார்.

"வேலைவாய்ப்பை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத் தப்படும். அதற்கு ஏதுவான நடவடிக் கைகளும் எடுக்கப்படும்.

"இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கத் தேவையான சட்டங்களும் திருத்தங் களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்," என்று கூறிய ஆளுநர், அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நிதியை அடிப்படை யாகக் கொண்டிருக்கும் என்றார்.

"மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழு வதும் மீண்டும் அமைக்கப்படும்.

"விவசாயிகள் நலனைப் பாது காக்க ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

"தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும். தமிழகத்தின் உண்மை யான நிதிநிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும்," என்றும் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டார்.

முதல்வருக்கு ஆலோசனை வழங்க ஐந்து வல்லுநர்கள்

தமிழக முதல்வருக்கான பொரு ளாதார ஆலோசனைக் குழுவில் உலகளவில் புகழ்பெற்ற ஐந்து பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் குழுவில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனா மிக்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இருப்பார்கள் என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பழனிசாமி: தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பில்லை

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரின் உரை முற்றிலும் ஏமாற்றம் அளித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதிகள் என்னவானது எனக் கேட்டுள்ளார்.

"நீட் உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சு என திமுக செயல்படு கிறது," என புகார் கூறிய பழனிசாமி, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.