முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டனை ஜூலை 2 வரை சிறை­யில் அடைக்க உத்தரவு

முன்­னாள் அமைச்­சர் மணி­கண்­டனை ஜூலை 2 வரை சிறை­யில் அடைக்க உத்தரவு

1 mins read
3590ef68-9c9e-49fc-8740-67c0b6e1a838
மணிகண்டன். படம்: ஊடகம் -
Google News Preferred Icon

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி சைதாப் பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தர விட்டார். இதைத் தொடர்ந்து சைதாப்­பேட்டை கிளைச் சிறை­யில் மணி­கண்­டன் அடைக்­கப்­பட்­டார்.

'நாடோடிகள்' பட நடிகை சாந்தினியும் மணிகண்டனும் விருப்பத்துடன் பழகியதால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாலியல் வன்கொடுமையாகக் கருதமுடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதனால் அவர் மீது போடப்பட்ட 376 என்ற சட்டப்பிரிவை நீக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

தன்னைத் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தாகக் கூறி ஏமாற்றி விட்டதாக மணி­கண்­டன் ­மீது நடிகை சாந்தினி புகார் அளித்­தி­ருந்­தார். அடித்து காயம் ஏற்படுத்துதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்து தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவானது.

இத­னைத் தொடர்ந்து தலை­ ம­றை­வாக இருந்த மணி­கண்­டனைத் தனிப்­ப­டை­ போலிசார் பெங்களூரில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.