பேய் ஓட்டுவதாக சிறுவனைக் கொன்ற பெண்கள் கைது

பேய் ஓட்டுவதாக சிறுவனைக் கொன்ற பெண்கள் கைது

1 mins read
864fd279-431d-45a4-80bf-28f5c3af9451
-

திருவண்ணாமலை: உடல்நலம் சரியில்லாத ஏழு வயது சிறுவனைப் பேய் ஓட்டுவதாகக் கூறி தாய் உள்பட மூன்று பெண்கள் மாற்றி மாற்றி அடித்ததில் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

சிறுவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில், கேவி குப்பத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, கவிதா, சிறுவனின் தாய் திலகவதி ஆகிய மூவரையும் கண்ணமங்கலம் போலிசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, வலிப்பு காரண மாக சிறுவன் இறந்துவிட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த ஏழு வயது சிறுவ னுக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி அவனது தாய் திலகவதி உள்பட மூன்று பெண்கள் சிறுவனை மாறி மாறி அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ள னர். இதில் படுகாயமடைந்த சிறு வன் கதறி அழுதபோதும் மூன்று பெண்களும் தொடர்ச்சியாக அடித்த தன் காரணமாக சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.